டி20 உலக கோப்பை: மழையால் ரத்தாகும் போட்டிகள்.. குறையும் சுவாரஸ்யம்..! இதோ புள்ளி பட்டியல்

By karthikeyan V  |  First Published Oct 28, 2022, 6:06 PM IST

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டிகள் மழையால் ரத்தாவதால் சுவாரஸ்யம் குறைந்துவருகிறது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று புள்ளி பட்டியலை பார்ப்போம்.
 


டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. டி20 உலக கோப்பை விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், சில போட்டிகள் மழையால் ரத்தாவதால் சுவாரஸ்யம் குறைந்துவருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாது அணிகளும் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்துவருகின்றன.

ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து போட்டி மழையால் ரத்தானது. தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஜெயித்திருக்க வேண்டிய போட்டியில் மழையால் தென்னாப்பிரிக்க அணி ஒரு புள்ளியை இழந்தது. இங்கிலாந்து - அயர்லாந்து போட்டியில் மழையால் இங்கிலாந்து அணி தோற்க நேரிட்டது.

Tap to resize

Latest Videos

undefined

டி20 உலக கோப்பை: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து போட்டி மழையால் ரத்து..! பெரும் ஏமாற்றம்

இன்று மெல்பர்னில் தொடர் மழை காரணமாக ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து போட்டி மற்றும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து போட்டி ஆகிய 2 போட்டிகளும் ரத்தாகின. இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு நிகராக இந்த உலக கோப்பையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான போட்டி. வலுவான அந்த 2 அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் ரத்தானது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

க்ரூப் 1 மற்றும் க்ரூப் 2 ஆகிய 2 க்ரூப்களின் புள்ளி பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களில் இருக்கின்றன என்று பார்ப்போம். 

க்ரூப் 1-ல் நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகளும் தலா 3 புள்ளிகளுடன் முதல் 4 இடங்களில் உள்ளன. இதில் நியூசிலாந்து அணி மட்டுமே 2 போட்டிகளில் ஆடி 3 புள்ளிகளை பெற்றுள்ளது. மற்ற 3 அணிகளும் தலா 3 போட்டிகளில் ஆடியுள்ள நிலையில், 3 புள்ளிகளை பெற்றுள்ளன. இன்னும் 2 போட்டிகள் மட்டுமே அந்த அணிகளுக்கு எஞ்சியிருப்பதால் இது பெரும் நெருக்கடி தான்.

க்ரூப் 2-ஐ பொறுத்தமட்டில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 3 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் உள்ளன.  ஜிம்பாப்வே அணியும் 3 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளது. 

Asianet Exclusive: இஸ்தான்புலில் ஐபிஎல் ஏலமா..? யார் சொன்னது..? ஐபிஎல் சேர்மன் அருண் துமால் திட்டவட்ட மறுப்பு

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளிடம் தோற்ற பாகிஸ்தான் அணி இன்னும் புள்ளி கணக்கை தொடங்கவேயில்லை. பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் கடைசி 2 இடங்களில் உள்ளன.
 

click me!