டி20 உலக கோப்பை: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து போட்டி மழையால் ரத்து..! பெரும் ஏமாற்றம்

By karthikeyan VFirst Published Oct 28, 2022, 3:54 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான போட்டி மழையால் ரத்தானது. இது அந்த அணிகளுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
 

டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், மழையால் சில போட்டிகள் ரத்தாவது சுவாரஸ்யத்தை குறைப்பதுடன், அணிகளுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் அளிக்கிறது. 

தென்னப்பிரிக்கா - ஜிம்பாப்வே இடையேயான போட்டியில் தென்னாப்பிரிக்கா ஜெயித்திருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

Asianet Exclusive: இஸ்தான்புலில் ஐபிஎல் ஏலமா..? யார் சொன்னது..? ஐபிஎல் சேர்மன் அருண் துமால் திட்டவட்ட மறுப்பு

அதன்பின்னர் ஆஃப்கானிஸ்தான் அணி ஆடவேண்டிய 2 போட்டிகள் ரத்தாகியுள்ளன. க்ரூப் 1-ல் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியில் மட்டுமே ஆடியது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டி மழையால் ரத்தானது.

இன்று மெல்பர்னில் தொடர் மழை காரணமாக 2 போட்டிகள் ரத்தாகின. ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான போட்டி மழையால் ரத்தான நிலையில், இந்த டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படும் அணிகளுக்கு இடையேயான மற்றும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான போட்டியும் மழையால் ரத்தானது.

இந்திய நேரப்படி ஒன்றரை மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி இது. மழையால் தாமதமானது. மழை நின்று, மைதானம் ஈரமாக இருந்ததால் போட்டி தொடங்க சரியான நேரத்திற்காக காத்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் போட்டி முழுமையாக ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இது இரு அணிகளுக்குமே பின்னடைவுதான். ஏற்கனவே அயர்லாந்துக்கு எதிராக ஜெயித்திருக்க வேண்டிய போட்டியில் மழை காரணமாக டி.எல்.எஸ் முறைப்படி இங்கிலாந்து அணி தோற்றது. இந்நிலையில், இப்போது மழையால் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான போட்டியும் மழையால் ரத்தாகியுள்ளது.

பாகிஸ்தானை கடைசி பந்தில் வீழ்த்தி ஒரு ரன்னில் ஜிம்பாப்வே த்ரில் வெற்றி! T20 World Cup-ஐ விட்டு வெளியேறும் பாக்

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ள க்ரூப் 1 போட்டிகள் தான் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 

click me!