#BBL ஷான் மார்ஷின் அதிரடி வீண்.. அலெக்ஸ் ஹேல்ஸின் காட்டடியால் சிட்னி தண்டர் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jan 1, 2021, 6:41 PM IST
Highlights

அலெக்ஸ் கேல்ஸின் காட்டடியால், மெல்போர்ன் ரெனெகேட்ஸை வீழ்த்தி சிட்னி தண்டர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
 

பிக்பேஷ் லீக்கில் குயின்ஸ்லாந்தில் இன்று நடந்த போட்டியில் சிட்னி தண்டரும் மெல்போர்ன் ரெனெகேட்ஸும் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. மழையால் போட்டி தாமதமானதால் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபின்ச் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஷான் மார்ஷ் அதிரடியாக ஆடி 48 பந்தில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 87 ரன்களை விளாச, அவரது அதிரடியால் 17 ஓவரில் 166 ரன்களை குவித்தது ரெனெகேட்ஸ் அணி.

17 ஓவர்களில் 167 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய சிட்னி தண்டர் அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், முதல் 4 ஓவர்களிலேயே கிட்டத்தட்ட போட்டியின் முடிவை உறுதி செய்துவிட்டார். பவுண்டரியும் சிக்ஸருமாக பறக்கவிட்ட அலெக்ஸ் ஹேல்ஸ், வெறும் 19 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 45 ரன்களை விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கவாஜாவும் பொறுப்புடன் ஆடி 48 ரன்கள் அடித்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டதால் 12 ஓவர் முடிவில் டி.எல்.எஸ் முறைப்படி சிட்னி தண்டர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

12 ஓவர் முடிவில் சிட்னி தண்டர் அணி 110 ரன்கள் அடித்திருந்தால் போதும். ஆனால் சிட்னி தண்டர் அணி 7 ரன்கள் கூடுதலாக அடித்து 117 ரன்கள் அடித்திருந்ததால் 7 ரன் வித்தியாசத்தில் டி.எல்.எஸ் முறைப்படி வென்றது.
 

click me!