பும்ரா, வாசிம் அக்ரமை விட சிறந்த ஃபாஸ்ட் பவுலர் அவருதான்.! லக்‌ஷ்மண், ஏபிடியையே கதறவிட்டவர் என அக்தர் புகழாரம்

By karthikeyan VFirst Published Jan 1, 2021, 5:48 PM IST
Highlights

பும்ரா, வாசிம் அக்ரமை விட மிக ஸ்மார்ட்டான பவுலர் முகமது ஆசிஃப் தான் என்றும், லக்‌ஷ்மண், டிவில்லியர்ஸ் உட்பட பல சிறந்த பேட்ஸ்மேன்களை கண்ணீர் விட்டு கதறவிட்டவர் ஆசிஃப் என்றும் அக்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த மற்றும் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களில் முக்கியமானவர்கள் பாகிஸ்தான் பவுலர்களாக இருப்பார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட், பல சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை கொடுத்துள்ளது. 

வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், அப்துல் காதிர், முகமது சமி, முகமது ஆசிஃப், முகமது அமீர், வஹாப் ரியாஸ், ஜுனைத் கான் ஆகிய அனைவருமே சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள். ஆனாலும் இவர்களில் நீண்டகாலம் ஆடி, பாகிஸ்தான் அணிக்காக அதிகமான பங்காற்றியது வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் அக்தர் தான். 

முகமது ஆசிஃப் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர் தான். ஆனால் சூதாட்டப்புகாரால் அவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு தடை அவரது கெரியரையே முடித்துவிட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 106 விக்கெட்டுகள் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் 46 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள முகமது ஆசிஃபின் கிரிக்கெட் கெரியர் அவரது 27வது வயதிலேயே முடிந்துவிட்டது.

இந்நிலையில், முகமது ஆசிஃப் குறித்து பேசியுள்ள அவரது பவுலிங் பார்ட்னரும், ஆல்டைம் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவருமான ஷோயப் அக்தர், மிக ஸ்மார்ட்டான ஃபாஸ்ட் பவுலர் முகமது ஆசிஃப் தான். பும்ரா, முகமது ஆமீர், இவ்வளவு ஏன் வாசிம் அக்ரமைவிட மிகச்சிறந்த பவுலர் ஆசிஃப். ஆசிஃபின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் கதறி அழுத பேட்ஸ்மேன்கள் பலரை நான் அறிவேன். இவரை(ஆசிஃபை) எப்படித்தான் நான் எதிர்கொள்வது என்று லக்‌ஷ்மணனே கூறியிருக்கிறார். ஏசியன் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின்போது டிவில்லியர்ஸே அழுதிருக்கிறார். ஆசிஃப் தான் நான் அறிந்தவரையில் மிக ஸ்மார்ட்டான பவுலர். அவருக்கு அடுத்து இப்போது பும்ரா தான் ஸ்மார்ட்டான பவுலர் என்று அக்தர் தெரிவித்திருக்கிறார்.
 

click me!