#AUSvsIND கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டன் அறிவிப்பு..!

Published : Jan 01, 2021, 03:38 PM IST
#AUSvsIND கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டன் அறிவிப்பு..!

சுருக்கம்

ஆஸி.,க்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளார்.  

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸி., அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டியில் இந்திய அணி ரஹானே தலைமையில், விராட் கோலி, ஷமி ஆகிய நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே இந்திய அணி வெற்றி பெற்றது.

முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிவிட்டு, விராட் கோலி நாடு திரும்பிவிட்டதால், ரஹானே தான் இந்திய அணியை கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்துகிறார். அதில் 2வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்ட நிலையில், 3வது டெஸ்ட் வரும் 7ம் தேதி தொடங்குகிறது.

3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா  இடம்பெற்றுள்ளார். ரோஹித் சர்மாவின் கம்பேக் இந்திய அணிக்கு வலுசேர்க்கும். 2வது டெஸ்ட்டில் காயமடைந்து தொடரை விட்டு வெளியேறிய உமேஷ் யாதவுக்கு மாற்று வீரராக நடராஜன் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

ரஹானேவின் கேப்டன்சியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியையும் பெற்றது. இந்நிலையில், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி