கேப்டன் க்ருணல் பாண்டியா.. 14 ஆண்டில் முதல் முறையாக அணியில் இடத்தை இழந்த யூசுஃப் பதான்

Published : Jan 01, 2021, 06:21 PM IST
கேப்டன் க்ருணல் பாண்டியா.. 14 ஆண்டில் முதல் முறையாக அணியில் இடத்தை இழந்த யூசுஃப் பதான்

சுருக்கம்

சையத் முஷ்டாக் அலி தொடருக்கான பரோடா அணியில் யூசுஃப் பதான் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.  

உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் வரும் 10ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில், க்ருணல் பாண்டியா தலைமையிலான பரோடா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

பரோடா அணியில் 2007ம் ஆண்டிலிருந்து ஆடிவரும் யூசுஃப் பதான் முதன்முறையாக இந்த ஆண்டு தொடருக்கான அணியில் புறக்கணிக்கப்பட்டுள்ளார். சையத் முஷ்டாக் அலி தொடரில் 28.27 என்ற சராசரி மற்றும் 133.47 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 1244 ரன்களை அடித்துள்ள யூசுஃப் பதான், கடந்த தொடரில் கூட, ஓரளவிற்கு நன்றாக ஆடினார். ஆனாலும் இந்த முறை பரோடா அணியில் சீனியர் வீரரான யூசுஃப் பதானுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது.

பரோடா அணி:

க்ருணல் பாண்டியா(கேப்டன்), தீபக் ஹூடா(துணை கேப்டன்), பார்கவ் பட், கேதார் தேவ்தர், பிரதிக் கோதாத்ரா, கார்த்திக் ககடே, லூக்மன் மெரிவாலா, மோஹித் மோங்கியா, த்ருவ் படேல், பாபாஷாஃபி பதான், பிரத்யூஷ் குமார், அபிமன்யூசிங் ராஜ்பூத், நிநாத் ராத்வா, ஆதித் ஷேத், விஷ்ணு சோலங்கி, சோயேப் சோபாரியா.
 

PREV
click me!

Recommended Stories

20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா
உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!