பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தான் வெல்லும்னு உறுதியா சொல்லாத ரெய்னா.. இதுதான் காரணம்

By karthikeyan VFirst Published Jun 2, 2019, 11:55 AM IST
Highlights

இதுவரை உலக கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. அதனால் முதன்முறையாக உலக கோப்பையில் இந்த முறை இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும், இதுவரை வைத்திருக்கும் சாதனையை விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற தீவிரத்தில் இந்திய அணியும் உள்ளன. 
 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணியும் பார்க்கப்படுகிறது. 

உலக கோப்பை இறுதி போட்டியை விட ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டி என்றால் அது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிதான். இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணிகளுமே கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் கடுமையாக போராடும். 

இதுவரை உலக கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. அதனால் முதன்முறையாக உலக கோப்பையில் இந்த முறை இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும், இதுவரை வைத்திருக்கும் சாதனையை விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற தீவிரத்தில் இந்திய அணியும் உள்ளன. 

இந்திய அணி வலுவாக உள்ள நிலையில், பாகிஸ்தான் அணி படுமோசமாக சொதப்பி தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் பாகிஸ்தான் வீழ்த்தியிருந்தாலும், இந்தமுறை அது நடக்க வாய்ப்பில்லை. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலகம் முழுதும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. அதேநேரத்தில் சர்ஃபராஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணி அதள பாதாளத்தில் கிடக்கிறது. 

இந்திய அணி வரும் 5ம் தேதி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. அதற்கடுத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளை தொடர்ந்து ஜூன் 16ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. 

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, பாகிஸ்தானுடன் ஆடுவதற்கு முன்பாக இந்திய அணி 3 போட்டிகளில் ஆடுகிறது. அந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுவிட்டால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி இந்திய அணிக்கு ஒரு மேட்டரே கிடையாது. பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுவிடும். இதுவரை இருக்கும் ரெக்கார்டும் நமக்குதான். மாறாக முதல் 3ல் சில போட்டிகளில் தோற்றால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்படும் என்று ரெய்னா தெரிவித்தார். 

click me!