GT vs RR: எந்த அணி கோப்பையை வெல்லும்..? காரணத்துடன் கூறும் சுரேஷ் ரெய்னா

Published : May 29, 2022, 04:08 PM IST
GT vs RR: எந்த அணி கோப்பையை வெல்லும்..? காரணத்துடன் கூறும் சுரேஷ் ரெய்னா

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று சுரேஷ் ரெய்னா கருத்து கூறியுள்ளார்.  

ஐபிஎல் 15வது சீசன் இன்றுடன் முடிவடைகிறது. இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிதாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

சமபலம் வாய்ந்த இரு அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன. இரு அணிகளுமே பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.

இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய 2 முறையும் குஜராத் அணிதான் வெற்றி பெற்றது. லீக் சுற்றில் 37 ரன்கள் வித்தியாசத்திலும், முதல் தகுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் குஜராத் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடியபோது மற்றும் இலக்கை விரட்டியபோதும் என இரண்டு முறையும் குஜராத் அணி வெற்றி பெற்றது.

எனவே ராஜஸ்தான் மீதான ஆதிக்கத்தை மீண்டும் செலுத்தி ஃபைனலிலும் வெற்றி பெறும் முனைப்பில் குஜராத் அணியும், ஏற்கனவே வாங்கிய 2 அடிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ராஜஸ்தான் அணியும் களமிறங்குகின்றன.

இந்நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகமுள்ளது என்று சுரேஷ் ரெய்னா கருத்துகூறியுள்ளார். இதுகுறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, ராஜஸ்தான் ராயல்ஸை விட குஜராத் டைட்டன்ஸ் அணி சற்று கூடுதல் வெற்றி வாய்ப்பை பெற்றுள்ளது. முதல் தகுதிப்போட்டியில் ஆடியதற்கு பின், அந்த அணி 4-5 நாட்கள் ரெஸ்ட்டில் இருந்திருக்கிறது. அதுமட்டுமல்லாது, இந்த சீசனில் குஜராத் அணி நல்ல டெம்போவில் உள்ளது. எனவே குஜராத் அணி தான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என்று ரெய்னா கூறியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சஞ்சு சாம்சன் ஆவேசம்.. வலியால் துடித்து அலறிய அம்பயர்.. பதறிய‌ கம்பீர்.. என்ன நடந்தது?
இங்கிலாந்தை கதறவிட்ட ஹெட் 'மாஸ்டர்'.. அட்டகாசமான சதம்.. வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!