மகளிர் டி20 சேலஞ்ச்: ஃபைனலில் வெலாசிட்டியை வீழ்த்தி கோப்பையை வென்றது சூப்பர்நோவாஸ்

By karthikeyan VFirst Published May 29, 2022, 12:19 AM IST
Highlights

மகளிர் டி20 சேலஞ்ச் ஃபைனலில் வெலாசிட்டியை வீழ்த்தி சூப்பர்நோவாஸ் அணி கோப்பையை வென்றது.

மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் ஃபைனல் சூப்பர்நோவாஸ் மற்றும் வெலாசிட்டி அணிகள் மோதின. புனேவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற வெலாசிட்டி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய சூப்பர்நோவாஸ் அணியின் தொடக்க வீராங்கனை டாட்டின் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான ப்ரியா புனியா 28 ரன்கள் அடித்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அதிரடியாக ஆடி 43 ரன்கள் அடித்தார்.

பூஜா வஸ்த்ராகர், சுனே லூஸ், ஹர்லீன் டியோல் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். அரைசதம் அடித்த டாட்டின் 44 பந்தில் 62 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 165 ரன்கள் அடித்த சூப்பர்நோவாஸ் அணி, 166 ரன்கள் என்ற சவாலான இலக்கை வெலாசிட்டி அணிக்கு நிர்ணயித்தது. 

166 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெலாசிட்டி அணி 161 ரன்கள் அடித்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஃபைனலில் வெலாசிட்டியை வீழ்த்திய சூப்பர்நோவாஸ் அணி கோப்பையை வென்றது.

click me!