குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 13ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
அகமதாபத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 13ஆவது லீக் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் ரூ.1.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இலங்கை வீரர் வணிந்து ஹசரங்கா நடந்து முடிந்த 2 போட்டியிலும் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் தான் இந்த தொடரிலிருந்து வணிந்து ஹசரங்கா விலகியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இடது குதிகால் காயம் ஏற்பட்ட நிலையில் இதுவரையில் அணியுடன் இணையாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தான் அவர் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஸ்பென்சர் ஜான்சனுக்கு பதிலாக நூர் அகமது அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும், தமிழக வீரர் சாய் கிஷோருக்கு பதிலாக தர்ஷன் நீல்கண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
மாயங்க் அகர்வால், டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், ஷாபாஸ் அகமது, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மாயங்க் மார்க்கண்டே, ஜெயதேவ் உனத்கட்.
குஜராத் டைட்டன்ஸ்:
விருத்திமான் சகா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில் (கேப்டன்), அஸ்மதுல்லா உமர்சாய், டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் திவேதியா, ரஷீத் கான், உமேஷ் யாதவ், மோகித் சர்மா, தர்ஷன் நீல்கண்டே.
இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய, 3 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 போட்டியிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அதிகபட்சமாக 199 ரன்களும், குறைந்தபட்சமாக 162 ரன்களும் எடுத்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த 2 போட்டிகளில் ஒரு போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், கடந்த ஆண்டு நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.