சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 13ஆவது ஐபிஎல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
விசாகப்பட்டினம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 13ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. இந்த சீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியோடு தொடங்கியது. இதைத் தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடந்த 2ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 3ஆவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் இதுவரையில் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 29 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 19 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
மேலும், 10 போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக சிஎஸ்கே 223 ரன்கள் எடுத்துள்ளது. இதே போன்று குறைந்தபட்சமாக 110 ரன்கள் எடுத்துள்ளது. மேலும், டெல்லி கேபிடல்ஸ் அதிகபட்சமாக 198 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக 83 ரன்கள் எடுத்துள்ளது. கடைசியாக நடந்த 3 போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.