லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மாயங்க் அகர்வால் அதிவேகமாக பந்து வீசி புதிய சாதனை படைத்துள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 11ஆவது ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் கேஎல் ராகுல் இம்பேக்ட் பிளேயராகவும், நிக்கோலஸ் பூரன் கேப்டனாகவும் செயல்பட்டனர்.
மேலும், மணிமாறன் சித்தார்த் மற்றும் மாயங்க் யாதவ் இருவரும் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்தப் போட்டியில் 200 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் மாயங்க் யாதவ் சிறப்பாக பந்து வீசி 4 ஒவர்களில் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். முக்கியமாக ஜானி பேர்ஸ்டோவ், பிராப்சிம்ரன் சிங் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றி லக்னோ அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.
இந்த போட்டியில் அதிவேகமாக பந்து வீசி வேகமாக பந்து வீசியவர்களின் பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளார். இந்தப் போட்டியில் அதிகபட்சமாக மாயங்க் யாதவ் 155.8 கிமீ வேகத்தில் பந்து வீசியுள்ளார். இதற்கு முன்னதாக ஷான் டைட் 157.71 கிமீ வேகத்தில் அதிகபட்சமாக பந்து வீசியிருக்கிறார். இதே போன்று,
லாக்கி பெர்குசன் - 157.3 KMPH
உம்ரான் மாலிக் - 157 KMPH
ஆண்ட்ரிச் நோர்ட்ஜே - 156.2 KMPH
மாயங்க் யாதவ் - 155.8 KMPH
இந்தப் போட்டியில் மாயங்க் யாதவ் 147, 146, 150, 141, 149, 156, 150, 142, 144, 153, 149, 152, 149, 147, 145, 140, 142, 153, 154, 149, 142, 152, 148 கிமீ வேகத்தில் பந்து வீசியுள்ளார். இறுதியில் இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
MAYANK YADAV BOWLED THE FASTEST BALL OF IPL 2024 - 155.8 KMPH. 🤯🔥pic.twitter.com/ck3Z0dLIWM
— Johns. (@CricCrazyJohns)