டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரர் ரிஷப் பண்ட்டின் நிகர சொத்து மதிப்பு ரூ.100 கோடி ஆகும்.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவர் ரிஷப் பண்ட். டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் என்று அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் இடம் பெற்று விளையாடி வருகிறார். இதுவரையில் 33 டெஸ்ட், 30 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 66 டி20 போட்டிகளிலும் இடம் பெற்று விளையாடியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவரான ரிஷப் பண்ட் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2271 ரன்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 865 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 987 ரன்களும் எடுத்துள்ளார். இதுதவிர ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக தற்போது விளையாடி வருகிறார்.
இதுவரையில் 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட் 15 அரைசதங்கள், ஒரு சதம் உள்பட 2884 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ராஜேந்திர பண்ட் மற்றும் சரோஜ் பண்ட் தம்பதியினருக்கு மகனாக பிறந்துள்ளார். சிறு வயது முதல் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிந்தார். இதையடுத்து டெல்லியில் சோனெட் கிளப் பயிற்சியாளர், தாரக் சின்ஹாவால் நடத்தப்பட்ட டேலண்ட் ஹண்ட் அகாடமியில் பயிற்சியில் இணைந்தார்.
டெல்லி அணியில் இணைந்த பிறகு, ரூர்க்கியிலிருந்து ஒவ்வொரு வாரமும் பயிற்சிக்கு வந்து செல்ல போதிய பண வசதி இல்லாததால் பண்ட், தனது அம்மாவுடன் டெல்லியிலேயே தங்கினார். ஆனால், டெல்லி அணியில் அதிக போட்டி இருந்த நிலையில், ரிஷப்பின் பயிற்சியாளர் தராக் சின்ஹா அவரை ராஜஸ்தானுக்கு அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் சென்ற பண்ட் அண்டர் 14 மற்றும் அண்டர் 16 தொடரில் இடம் பெற்று விளையாடினார். அதன் பிறகு மறுபடியும் டெல்லி வந்த ரிஷப் பண்ட் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார்.
அண்டர் 19 இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி நடந்த நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் அடித்து பிரபலமானார். அதன் பிறகு விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் தன்னை திரும்பி பார்க்க வைத்தார். 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த 2022 -2023 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி ரிஷப் பண்டின் பிசிசிஐ ஒப்பந்தம் ரூ.5 கோடி. தற்போது அது ரூ.3 கோடியாக குறைந்துள்ளது. ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு ரூ.6 லட்சம் என்று சம்பளம் பெறுகிறார்.
இது தவிர ஐபிஎல் தொடர் மூலமாக ரூ.16 கோடி வரையில் வருடத்திற்கு வருமானம் பெறுகிறார். இது விராட் கோலி, தோனி, ஹர்திக் பாண்டியாவின் சம்பளத்தை விட அதிகம். இது தவிர Boat, Adidas, JSW Steel, Noise, Realme, Dream11, Ketch, SG, Himalayan, Boost, and Cadbury என்றூ பல பிராண்டுகளுக்கு விளம்பர தூதராகவும் இருக்கிறார்.
ரிஷப் பண்ட் கார்:
ரிஷப் பண்ட் ஆடி, மெர்சிடெஸ், போர்டு என்று பல கார்களை வைத்துள்ளார்.
Audi A8: ரூ. 1.3 கோடி மதிப்பிலா ஆடி ஏ8.
Mercedes Benz C Class: ரூ. 55 லட்சம் மதிப்பிலா மெர்சிடெஸ் பென்ஸ் கார்
A yellow Ford Mustang: ரூ. 2 கோடி மதிப்பிலா போர்டு முஷ்டாங்
Mercedes Benz GLE: ரூ. 85 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையில் பென்ஸ் ஜிஎல்இ கார் வைத்திருக்கிறார்.
மொத்தமாக ரிஷப் பண்ட் நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.100 கோடி ஆகும்.