#SRHvsRCB எதிர்பார்த்த மாற்றங்களை அப்படியே செய்த சன்ரைசர்ஸ்..! ஆர்சிபி முதலில் பேட்டிங்

Published : Apr 14, 2021, 07:45 PM IST
#SRHvsRCB எதிர்பார்த்த மாற்றங்களை அப்படியே செய்த சன்ரைசர்ஸ்..! ஆர்சிபி முதலில் பேட்டிங்

சுருக்கம்

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், ஆர்சிபியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

சன்ரைசர்ஸ் அணியில் எதிர்பார்த்த 2 மாற்றங்கள் அப்படியே செய்யப்பட்டுள்ளன. ஸ்பின் ஆல்ரவுண்டர் முகமது நபிக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்பின் ஆல்ரவுண்டருக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் எடுக்கப்பட்டதால், மற்றொரு ஸ்பின்னர் தேவை என்பதற்காக, ஃபாஸ்ட் பவுலர் சந்தீப் ஷர்மா நீக்கப்பட்டு ஸ்பின்னர் ஷபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

டேவிட் வார்னர்(கேப்டன்), ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ஹோல்டர், விஜய் சங்கர், அப்துல் சமாத், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், ஷபாஸ் நதீம், டி.நடராஜன்.

ஆர்சிபி அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் ஆடாத தேவ்தத் படிக்கல், இந்த போட்டியில் ஆடுவதால் ரஜாத் பட்டிதர் நீக்கப்பட்டுள்ளார்.

ஆர்சிபி அணி:

விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஷபாஸ் அகமது, டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், கைல் ஜாமிசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!