IPL 2022 Retention: ரஷீத் கானை விடுவித்தது ஏன்..? உண்மையை உடைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

By karthikeyan VFirst Published Dec 2, 2021, 2:51 PM IST
Highlights

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்த ரஷீத் கானை ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்பாக விடுவித்ததற்கான காரணம் என்னவென்று அந்த அணி விளக்கமளித்துள்ளது.
 

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் புதிதாக இணைவதால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. அதனால் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், நவம்பர் 30ம் தேதி அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.

பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஆர்சிபி ஆகிய அணிகள், வீரர்கள் தக்கவைப்பில் அதிகபட்சமாக வழங்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவில்லை. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.14 கோடிக்கும், அப்துல் சமாத் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய வீரர்களை தலா ரூ.4 கோடிக்கும் தக்கவைத்தது. டேவிட் வார்னர் மற்றும் ரஷீத் கான் ஆகிய இருபெரும் மேட்ச் வின்னர்கள் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய வீரர்களை விடுவித்துள்ளது.

டேவிட் வார்னரை கடந்த சீசனின் 2ம் பாதியில் ஓரங்கட்டியபோதே, வார்னர் சன்ரைசர்ஸை விட்டு விலகுவது உறுதியாகிவிட்டது. ஆனால் ரஷீத் கானை தக்கவைக்காதது ஆச்சரியம் தான்.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சி.இ.ஓ, ரஷீத் கானை விடுவித்தது கடினமான முடிவு. ஆனால் ஊதியத்தை முன்வைத்து ஏலத்தில் பங்கேற்க ஒரு வீரர் விரும்பும்போது, அவரது முடிவுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஏலத்தில் ரஷீத் கானை சரியான தொகைக்கு எடுக்க முயற்சி செய்வோம் என்றார் அவர்.

பவுலிங்கில் வலுவான அணியான சன்ரைசர்ஸ் அணி, அப்படி திகழ முக்கிய காரணமாக இருந்தவர் ரஷீத் கான். அந்த அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் விக்கெட் வீழ்த்தி கொடுத்ததுடன், அந்த அணியின் மேட்ச் வின்னராகவும் திகழ்ந்த ரஷீத் கான், சன்ரைசர்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் 76 போட்டிகளில் ஆடி 93 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
 

click me!