IPL 2023: புதிய கேப்டனின் கீழ் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான ஆடும் லெவன்

Published : Mar 27, 2023, 11:05 PM IST
IPL 2023: புதிய கேப்டனின் கீழ் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான ஆடும் லெவன்

சுருக்கம்

ஐபிஎல் 16வது சீசனில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.  

ஐபிஎல் 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல்லுக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்சி செய்துவந்த கேன் வில்லியம்சனை புறக்கணித்துவிட்டு எய்டன் மார்க்ரமை கேப்டனாக நியமித்து சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் களமிறங்குகிறது. 

இந்த சீசனுக்கான மினி ஏலத்தில் மயன்க் அகர்வால் மாதிரியான சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுத்து வலுவான அணியை கட்டமைத்தது. மயன்க் அகர்வால் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். ராகுல் திரிபாதி 3ம் வரிசையிலும், கேப்டன் மார்க்ரம் 4ம் வரிசையிலும் ஆடுவார்கள்.

IPL 2023: விதி வலியது.. எல்லா அணிகளும் புறக்கணித்த சந்தீப் ஷர்மாவை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

இங்கிலாந்து அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் 5ம் வரிசையில் ஆடுவார். க்ளென் ஃபிலிப்ஸ் - ஹென்ரிச் கிளாசன் ஆகிய இருவரில் ஒருவர் விக்கெட் கீப்பர் ஃபினிஷராக ஆடுவார். 

ஸ்பின்னர்களாக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் இங்கிலாந்து ரிஸ்ட் ஸ்பின்னர் அடில் ரஷீத் ஆகிய இருவரும் ஆடுவார்கள். ஃபாஸ்ட்பவுலர்களாக புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக் மற்றும் நடராஜன் ஆகிய மூவரும் ஆடுவார்கள்.

IPL 2023: ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத கேகேஆர் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான ஆடும் லெவன்:

மயன்க் அகர்வால், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹாரி ப்ரூக், க்ளென் ஃபிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர், அடில் ரஷீத், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், நடராஜன்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரேலியாவில் முதல் சதம் விளாசிய 'ரன் மெஷின்' ஜோ ரூட்! ஆஷஸ் டெஸ்ட்டில் அசத்தல்!
IND vs SA 3வது ஓடிஐ..இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. தமிழக வீரர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!