IPL 2023: ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத கேகேஆர் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

By karthikeyan V  |  First Published Mar 27, 2023, 8:12 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் களமிறங்கும் கேகேஆர் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 


ஐபிஎல் 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. இதற்கு 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேகேஆர் அணி, 3வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. 

கடந்த சீசனில் கேகேஆர் அணியின் கேப்டன்சியை ஏற்ற ஷ்ரேயாஸ் ஐயர், முதுகு காயத்தால் இந்த சீசனின் முதல் பாதியில் ஆடவில்லை.  அதனால் நிதிஷ் ராணா இடைக்கால கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நிதிஷ் ராணா தலைமையிலான முதல் பாதி சீசனுக்கான கேகேஆர் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.

Tap to resize

Latest Videos

IPL 2023: ஆர்சிபி தான் இந்த சீசனின் பெஸ்ட் பவுலிங் அட்டாக்..! சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

உள்நாட்டு போட்டிகளில் அபாரமாக ஆடி சதங்களாக விளாசி சாதனை படைத்து நல்ல ஃபார்மில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த நாராயண் ஜெகதீசன் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அதிரடி வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். தற்காலிக கேப்டன் நிதிஷ் ராணா 3ம் வரிசையில் ஆடுவார். ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் 4ம் வரிசையிலும், ரிங்கு சிங் 5ம் வரிசையிலும் ஆடுவார்கள். ஆண்ட்ரே ரசல் ஃபினிஷராக ஆடுவார். 

கேகேஆர் அணியின் மேட்ச் வின்னரும் ஆல்ரவுண்டருமான சுனில் நரைனுடன் வருண் சக்கரவர்த்தி 2வது ஸ்பின்னராக ஆடுவார். ஃபாஸ்ட் பவுலர்களாக ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இருவருடன் 3வது ஃபாஸ்ட் பவுலராக டிம் சௌதி - லாக்கி ஃபெர்குசன் ஆகிய இருவரில் ஒருவர் ஆடுவார்.

செம கடுப்பில் இருந்த ஜடேஜாவை சமாதானப்படுத்திய தோனி..! கண்டிஷன் போட்டு சிஎஸ்கே ஆட ஒப்புக்கொண்ட ஜடேஜா

கேகேஆர் அணியின் வலுவான ஆடும் லெவன்:

நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், நிதிஷ் ராணா (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாகூர், டிம் சௌதி/லாக்கி ஃபெர்குசன், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி. 

click me!