IPL 2023: விதி வலியது.. எல்லா அணிகளும் புறக்கணித்த சந்தீப் ஷர்மாவை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

By karthikeyan VFirst Published Mar 27, 2023, 8:44 PM IST
Highlights

ஐபிஎல் 16வது சீசனிலிருந்து காயத்தால் விலகிய ஃபாஸ்ட் பவுலர் பிரசித் கிருஷ்ணாவுக்கு மாற்று வீரராக சந்தீப் ஷர்மாவை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
 

ஐபிஎல் 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. ஐபிஎல் தொடங்கிய முதல் சீசனில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன்பின்னர் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை.

கடந்த சீசனில் ஃபைனல் வரை சென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஃபைனலில் குஜராத் டைட்டன்ஸிடம் தோற்று 2வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. எனவே இந்த சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 

IPL 2023: ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத கேகேஆர் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

பயிற்சியாளர் குமார் சங்கக்கராவின் வழிகாட்டுதலில், சஞ்சு சாம்சனின் கேப்டன்சியில் வலுவான அணியாக களமிறங்குகிறது ராஜஸ்தான் ராயல்ஸ். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஃபாஸ்ட் பவுலர் பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார். நல்ல உயரமான, 140 கிமீ வேகத்தில் வீசக்கூடிய பிரசித் கிருஷ்ணா விலகியது ராஜஸ்தான் ராயல்ஸுக்கு பெரும் பின்னடைவு.

பிரசித் கிருஷ்ணாவின் இழப்பை ஈடுசெய்யும் விதமாக அவருக்கு மாற்று வீரராக, ஐபிஎல்லில் 10 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த சீனியர் பவுலரான சந்தீப் ஷர்மாவை ஒப்பந்தம் செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

IPL 2023: ஆர்சிபி தான் இந்த சீசனின் பெஸ்ட் பவுலிங் அட்டாக்..! சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

2013லிருந்து 2017 வரை பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆடிய சந்தீப் ஷர்மா, 2018லிருந்து 2021 வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடினார். நன்றாக ஸ்விங் செய்து வீசவல்ல சந்தீப் ஷர்மா, சன்ரைசர்ஸ் அணியில் புவனேஷ்வர் குமாருடன் இணைந்து அபாரமாக பந்துவீசி அந்த அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர். ஆனாலும் அவரை கடந்த சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன் விடுவித்த சன்ரைசர்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுக்கவில்லை.

கடந்த சீசனுக்கான மெகா ஏலத்தில் சந்தீப் ஷர்மாவை பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. ஆனால் இந்த சீசனுக்கான ஏலத்திற்கு முன் விடுவித்தது. இந்த சீசனுக்கான மினி ஏலத்தில் ரூ.50 லட்சத்தை அடிப்படை விலையாக கொண்ட சந்தீப் ஷர்மாவை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. எந்த அணியும் ஏலத்தில் வாங்கவில்லை என்றாலும், பிரசித் கிருஷ்ணா விலகியதால், அவருக்கு மாற்று வீரராக சந்தீப் ஷர்மாவை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

செம கடுப்பில் இருந்த ஜடேஜாவை சமாதானப்படுத்திய தோனி..! கண்டிஷன் போட்டு சிஎஸ்கே ஆட ஒப்புக்கொண்ட ஜடேஜா

ஐபிஎல்லில் 104 போட்டிகளில் ஆடி 114 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் சந்தீப் ஷர்மா. ஐபிஎல்லில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய சில சீனியர் பவுலர்களில் சந்தீப் ஷர்மாவும் ஒருவர்.
 

click me!