பேட்ஸ்மேன் நடு பிட்ச்சில் கூட நிற்பான்! உங்களுக்கு என்ன பிரச்னை? ரிஷப் விவகாரத்தில் அம்பயர்களை சாடிய கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Aug 28, 2021, 4:00 PM IST
Highlights

ரிஷப் பண்ட்டை க்ரீஸை விட்டு வெளியே நின்று பேட்டிங் ஆடக்கூடாது என கள நடுவர்கள் அறிவுறுத்தியதற்கு எதிராக கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், உண்மையை, தனக்கு நியாயம் என பட்டதை எந்தவித ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாக பேசக்கூடியவர். அது எப்பேர்ப்பட்டவரை பற்றிய விஷயமாக இருந்தாலும் சரி, மிகவும் வெளிப்படையாக பேசுவார்.

அண்மையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைனின் கருத்துடன் முரண்பட்டு, அவருக்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார். பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பிவரும் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரை தொடர்புகொண்டு அவரது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என்று கவாஸ்கர் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், தற்போது ரிஷப் பண்ட் க்ரீஸை விட்டு வெளியே நின்று ஆடும் விவகாரம் குறித்து பேசியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து இடையே நடந்துவரும் டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட், ஃபாஸ்ட் பவுலர்களின் ஸ்விங்கை  தடுப்பதற்கு க்ரீஸை விட்டு வெளியே நின்று தான் ஆடிவருகிறார்.

அந்தவகையில், 3வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலும் க்ரீஸுக்கு வெளியே தான் நின்றார். ஆனால் கள நடுவர், பிட்ச்சில் கால்தடத்தை பதிக்கும் நோக்கில் ரிஷப் பண்ட் க்ரீஸை விட்டு வெளியே நிற்பதாக கருதி, அவரை க்ரீஸுக்குள் நின்று ஆடுமாறு அறிவுறுத்தினர்.

இந்நிலையில், அதுகுறித்து பேசியுள்ள கவாஸ்கர், ரிஷப் பண்ட்டை க்ரீஸுக்குள் நின்று ஆடுமாறு அம்பயர் அறிவுறுத்தியது எனக்கு வியப்பாக இருக்கிறது. பேட்ஸ்மேன் பிட்ச்சில் எங்கு வேண்டுமானாலும் நிற்கலாம். அது அவரது விருப்பம். நடு பிட்ச்சில் கூட நிற்கலாம். க்ரீஸுக்கு வெளியே நிற்கக்கூடாது என்றால், ஸ்பின்னர்களை இறங்கிவந்து ஆடும்போது என்ன செய்வது? என்று கவாஸ்கர் அம்பயர்களின் செயல்பாட்டை விமர்சித்துள்ளார்.
 

click me!