பையன் செம டேலண்ட்.. டெக்னிக், தெளிவு, நிதானம் எல்லாமே அபாரம்..! இந்திய இளம் வீரரை விதந்தோதிய கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Nov 12, 2021, 4:56 PM IST
Highlights

இந்திய அணியின் இளம் வீரரும், இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கையான எதிர்கால வீரருமாக திகழும் ருதுராஜ் கெய்க்வாட்டை முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வெகுவாக புகழ்ந்துள்ளார்.
 

நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பெரிய வீரர்கள் சிலருக்கு ஓய்வு அளிக்கப்படுவதால் இளம் வீரர்கள் இந்திய அணியில் வாய்ப்பு பெறுகின்றனர்.

விராட் கோலி, ஷமி, பும்ரா ஆகிய சீனியர் வீரர்கள் டி20 தொடரில் ஆடாததால், ஐபிஎல்லில் அசத்திய இளம் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான் ஆகிய வீரர்களுக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது.

இந்திய டி20 அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், ரவிசந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

அதேபோல டெஸ்ட் அணியிலும் இளம் வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. ரோஹித் சர்மா, பும்ரா, ஷமி, ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர் ஆகிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதால், ஷ்ரேயாஸ் ஐயர், பிரசித் கிருஷ்ணா, கேஎஸ் பரத் ஆகிய வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

இந்திய டெஸ்ட் அணி:

விராட் கோலி (கேப்டன் - 2வது டெஸ்ட்டில் மட்டும் ஆடுகிறார்), அஜிங்க்யா ரஹானே (கேப்டன் - முதல் டெஸ்ட்டுக்கு மட்டும்), புஜாரா, கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

இந்நிலையில், ஐபிஎல்லில் அசத்தலாக ஆடி 14வது சீசனில் அதிக ரன்களை குவித்த வீரராக சாதனையுடன் சீசனை முடித்த ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைத்திருக்கும் நிலையில், அவரது திறமையை வெகுவாக புகழ்ந்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

ஐபிஎல் 13வது சீசனின் முதல் பாதியில் சிஎஸ்கே அணியில் ஆட கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளாத ருதுராஜ் கெய்க்வாட், 2வது பாதியில் ஆடிய போட்டிகளில் அருமையாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் 14வது சீசனில் ஆரம்பத்திலிருந்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட், அமீரகத்தில் நடந்த 2ம் பாதி தொடரில் மிக மிகச்சிறப்பாக ஆடி சிஎஸ்கே அணி 4வது முறை கோப்பையை தூக்க முக்கிய காரணமாக திகழ்ந்தார். ஐபிஎல் 14வது சீசனில் 635 ரன்களை குவித்த ருதுராஜ் கெய்க்வாட், இந்த சீசனில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையுடன் சீசனை முடித்தார்.

இந்நிலையில், இந்திய டி20 அணியில் இடம்பிடித்திருக்கும் ருதுராஜ் கெய்க்வாட்டின் திறமையை வெகுவாக விதந்தோதியுள்ளார் சுனில் கவாஸ்கர். இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், மிகச்சிறந்த திறமைசாலி ருதுராஜ் கெய்க்வாட். இந்திய அணிக்காக 3 விதமான போட்டிகளிலும் ருதுராஜ் விரைவில் ஆடுவார். நிறைய ஷாட்டுகளை கைவசம் வைத்திருக்கிறார்; அவரது ஷாட் செலக்‌ஷன் நன்றாக இருக்கிறது. ருதுராஜின் பேட்டிங் டெக்னிக், எந்தவிதமான நெருக்கடியையும் நிதானத்துடன் கையாளும் திறன் ஆகியவை பிரமிக்க வைக்கின்றன. அவர் தன்னை ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக எப்படி வளர்த்துக்கொள்ள போகிறார் என்பதை பார்க்க சிறப்பாக இருக்கும் என்று கவாஸ்கர் ருதுராஜை புகழ்ந்து பேசியுள்ளார். 

click me!