இன்னிங்ஸ் பில்டும் பண்றான்.. ஃபினிஷும் பண்றான்..! பையன் செம பிளேயர்.. இந்திய வீரரை வெகுவாக புகழ்ந்த கவாஸ்கர்

Published : Feb 21, 2022, 08:45 PM IST
இன்னிங்ஸ் பில்டும் பண்றான்.. ஃபினிஷும் பண்றான்..! பையன் செம பிளேயர்.. இந்திய வீரரை வெகுவாக புகழ்ந்த கவாஸ்கர்

சுருக்கம்

இந்திய அணியின் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவை வெகுவாக புகழ்ந்துள்ளார் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.  

உள்நாட்டு போட்டிகள் மற்றும் ஐபிஎல் ஆகிய தொடர்களில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அதன் பலனாக கடந்த ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ், அறிமுக டி20 தொடரில் 3 போட்டிகளில் 107 ரன்கள் அடித்தார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் அபாரமாக விளையாடி தொடர் நாயகன் விருதையும் வென்றார். குறிப்பாக 3வது டி20 போட்டியில் அவர் ஆடிய விதம் அபாரமானது. 31 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களுடன் 65 ரன்களை குவித்தார் சூர்யகுமார் யாதவ். சூர்யகுமார் மற்றும் வெங்கடேஷ் ஐயரின் அதிரடியான பேட்டிங்கால் கடைசி 5 ஓவரில் இந்திய அணிக்கு 86 ரன்கள் கிடைத்தது. அதன்விளைவாக, 15 ஓவரில் 98 ரன்கள் என்ற நிலையிலிருந்து 20 ஓவரில் 184 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எட்டிய இந்திய அணி, 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்றது.

கடைசி டி20 போட்டியின் ஆட்டநாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருது ஆகிய 2 விருதுகளையும் சூர்யகுமார் யாதவ் தட்டிச்சென்றார். 

3ம் பேட்டிங் ஆர்டரில் இறங்கி, பார்ட்னர்ஷிப் அமைத்து இன்னிங்ஸை பில்ட் செய்யும் சூர்யகுமார் யாதவ், பின்வரிசையில் இறங்கி டெத் ஓவர்களில் சிக்ஸர்களை விளாசி ஃபினிஷும் செய்து கொடுக்கிறார். எந்த பேட்டிங் ஆர்டரில் இறங்கினாலும், ஆட்டத்தின் சூழலுக்கேற்ப அபாரமாக விளையாடும் சூர்யகுமார் யாதவை இனிமேல் புறக்கணிக்கவே முடியாதபடி, இந்திய அணியில் தனக்கென நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார்.

பாரம்பரியமான ஷாட்டுகளை ஆடும் சூர்யகுமார் யாதவ், அதேவேளையில் சில வித்தியாசமான ஷாட்டுகளையும் ஆடி மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடுகிறார். இந்தியாவின் 360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், அவரது மிரட்டலான அதிரடி பேட்டிங்கால் அனைவரது பாராட்டுகளையும் குவித்துவருகிறார்.

அந்தவகையில், சூர்யகுமார் யாதவை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். சூர்யகுமார் யாதவ் குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் கண்டிப்பாக இடம்பிடிப்பார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சூர்யகுமாரும் வெங்கடேஷ் ஐயரும் சேர்ந்து போட்டியை முடித்து கொடுத்தனர். கடைசி டி20 போட்டியிலும் 4 விக்கெட் விழுந்தபிறகும், இந்திய அணி அடித்த ஸ்கோர், அணி சரியான வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டிருப்பதை காட்டுகிறது. யாருமே பெர்ஃபெக்ட்டாக இருக்க முடியாது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டிற்கு புதிதாக இருந்தாலும், சூர்யகுமார் யாதவ் எந்த வரிசையிலும் இறங்கி எந்த சூழலிலும் சிறப்பாக ஆடுகிறார். வெங்கடேஷ் ஐயரும் சிறப்பாக ஆடுகிறார். 

3ம் வரிசையில் இறங்கி சூர்யகுமார் இன்னிங்ஸ் பில்டும் செய்கிறார். ஃபினிஷிங் ரோலையும் சிறப்பாக செய்கிறார். கிரேட் காம்பினேஷன் என சூர்யகுமாரை வெகுவாக புகழ்ந்துள்ளார் கவாஸ்கர்.
 

PREV
click me!

Recommended Stories

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
கிரிக்கெட்டை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஐபிஎல் உரிமையாளரை விளாசிய கவுதம் கம்பீர்! என்ன நடந்தது?