இந்தியா - பாகிஸ்தான் ஆல்டைம் டெஸ்ட் லெவன்.. ஜாம்பவான் கவாஸ்கரின் தேர்வு

By karthikeyan VFirst Published May 17, 2020, 11:15 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், இந்தியா - பாகிஸ்தான் ஆல்டைம் டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். 
 

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் முதன்மையானவராக திகழ்பவர். முன்னாள் வீரர்கள், ஆல்டைம் லெவனை தேர்வு செய்தால், பெரும்பாலும் அவர்களது காலக்கட்ட வீரர்களைத்தான்  தேர்வு செய்வார்கள். அப்படித்தான்  கவாஸ்கரும் தேர்வு செய்துள்ளார். 

கவாஸ்கர் தேர்வு செய்த இந்தியா - பாகிஸ்தான் ஆல்டைம் டெஸ்ட் லெவனின் தொடக்க வீரர்களாக ஹானிஃப் முகமது மற்றும் சேவாக் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். இந்த அணியில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ள, 2000ம்களில் அறிமுகமான ஒரே வீரர் சேவாக் தான். 

மூன்றாம் வரிசைக்கு பாகிஸ்தானின் ஜாகீர் அப்பாஸையும், நான்காம் வரிசையில் சச்சின் டெண்டுல்கரையும் ஐந்தாம் வரிசை வீரராக குண்டப்பா விஸ்வநாத்தையும் தேர்வு செய்த கவாஸ்கர், அவரது காலக்கட்ட மற்றும் ஆல்டைம் சிறந்த ஆல்ரவுண்டர்களான கபில் தேவ் மற்றும் இம்ரான் கான் ஆகிய இருவரையும் ஆல்ரவுண்டர்களாக தேர்வு செய்துள்ளார். 

விக்கெட் கீப்பராகவும், அவரது காலக்கட்ட வீரரான சையத் கிர்மானியைத்தான் தேர்வு செய்துள்ளார். உலகின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் கூட்டணியான வாசிம் அக்ரம் - வக்கார் யூனிஸ் ஆகிய இருவரையும் ஃபாஸ்ட் பவுலர்களாகவும் பாகிஸ்தானின் ரிஸ்ட் ஸ்பின்னர் அப்துல் காதிரையும் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். 

இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் லெவன் என்றாலும், பாரபட்சம் காட்டி அதிகமான இந்திய வீரர்களை தேர்வு செய்யாமல், மிகவும் நேர்மையாக தேர்வு செய்துள்ளார் கவாஸ்கர். 

கவாஸ்கர் தேர்வு செய்துள்ள இந்தியா - பாகிஸ்தான் ஆல்டைம் டெஸ்ட் லெவன்:

ஹனிஃப் முகமது, வீரேந்திர சேவாக், ஜாகீர் அப்பாஸ், சச்சின் டெண்டுல்கர், குண்டப்பா விஸ்வநாத், கபில் தேவ், இம்ரான் கான், சையத் கிர்மானி(விக்கெட் கீப்பர்), வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அப்துல் காதீர்.
 

click me!