#AUSvsIND அவரோட பேட்டிங் டெக்னிக்கே சரியில்ல.. அடுத்த மேட்ச்ல கண்டிப்பா சேர்க்கக்கூடாது..! கவாஸ்கர் அதிரடி

By karthikeyan VFirst Published Dec 19, 2020, 9:14 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த டெஸ்ட்டில் பிரித்வி ஷாவை இந்திய அணியில் எடுக்கக்கூடாது என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்த முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஓரளவிற்கு நன்றாக பேட்டிங் ஆடி, கோலி, ரஹானே, புஜாரா ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கால் 244 ரன்களை அடித்த இந்திய அணி, 2வது இன்னிங்ஸில் படுமட்டமாக பேட்டிங் ஆடி வெறும் 36 ரன்களுக்கு சுருண்டது.

முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலிய அணி, 2வது இன்னிங்ஸில் இந்திய அணியை 36 ரன்களுக்கு சுருட்டியதால், 2வது இன்னிங்ஸில் 90 ரன்கள் என்ற எளிய இலக்கை அசால்ட்டாக அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரையும் ஓவர்டேக் செய்து, தொடக்க வீரராக அணியில் எடுக்கப்பட்ட பிரித்வி ஷா, முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டானார்; 2வது இன்னிங்ஸில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2 இன்னிங்ஸ்களிலுமே படுமோசமாக சொதப்பினார். 2 போட்டிகளிலுமே ஒரே மாதிரி, பேட்டிற்கும் காலுக்கும் இடையே பந்தை விட்டு போல்டானார். பிரித்வியின் பலவீனம் இதுதான் என்று, முதல் இன்னிங்ஸில் அவர் அவுட்டாவதற்கு முன்பே ரிக்கி பாண்டிங் வர்ணனையில் சொல்லிவிட்டார்.

தனது பலவீனத்தை அப்பட்டமாக அனைவரும் அறிந்துகொள்ளும்படி வைத்துக்கொண்டதும், அதை திருத்திக்கொண்டு மேம்படாததுமே பிரித்வி ஷாவின் சொதப்பலுக்கு முக்கிய காரணம்.

பிரித்வி ஷாவிற்கு பதிலாக ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ள நிலையில், பிரித்வி ஷா குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், பிரித்வி ஷாவின் பேட்டிங் டெக்னிக்கில் பிரச்னை உள்ளது. அவரை அடுத்த டெஸ்ட் போட்டிக்கான அணியில் கண்டிப்பாக எடுக்கக்கூடாது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!