சூப்பர் பிளேயர்ங்க.. அவரை டெஸ்ட் அணியிலும் எடுங்க..! இளம் வீரருக்காக வரிந்துகட்டிய கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Mar 27, 2021, 5:17 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான இளம் ஃபாஸ்ட் பவுலர் பிரசித் கிருஷ்ணாவை டெஸ்ட் அணியிலும் எடுக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா ஆடாததால், கர்நாடகாவை சேர்ந்த 25 வயது இளம் ஃபாஸ்ட் பவுலரான பிரசித் கிருஷ்ணா இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பை பெற்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான பிரசித் கிருஷ்ணா, அபாரமாக பந்துவீசி 4 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். மேலும் அறிமுக ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையையும் படைத்தார்.

2வது போட்டியில் பிரசித் கிருஷ்ணா சிறப்பாக வீசி 2 விக்கெட் வீழ்த்தினார். ஆனால் அந்த போட்டியில் ஸ்பின்னர்கள் அதிக ரன்களை வாரி வழங்கியதால் இந்திய அணி தோல்வியை தழுவியது. இரண்டே போட்டிகளில் ஆடி 6 விக்கெட் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், பாராட்டுகளையும் பெற்றார் பிரசித் கிருஷ்ணா.

நல்ல உயரமாக இருக்கும் பிரசித் கிருஷ்ணா, பந்தின் சீமை பயன்படுத்தி நன்றாக வீசுவதுடன், அவர் உயரமாக இருப்பதால் எக்ஸ்ட்ரா பவுன்ஸும் கிடைக்கிறது. இது அவரது பவுலிங்கிற்கு வலுசேர்க்கிறது.

பிரசித் கிருஷ்ணாவின் பவுலிங்கை க்ளென் மெக்ராத் உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் வெகுவாக புகழ்ந்துவரும் நிலையில், பிரசித் கிருஷ்ணாவை டெஸ்ட் அணியிலும் சேர்க்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், பிரசித் கிருஷ்ணாவை இந்திய டெஸ்ட் அணியிலும் சேர்க்க தேர்வாளர்கள் பரிசீலிக்க வேண்டும். பும்ரா டி20, ஒருநாள் போட்டிகளில் அபாரமாக வீசி, அதைத்தொடர்ந்து டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்து எப்படி அசத்திவருகிறாரோ, அவரைப்போலவே பிரசித் கிருஷ்ணாவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவார். அவரது Seam-up பொசிசன் மற்றும் வேகம் ஆகியவற்றை பார்க்கும்போது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள கவாஸ்கர், அவரை டெஸ்ட் அணியிலும் சேர்க்க வலியுறுத்தியுள்ளார்.
 

click me!