#INDvsENG ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டி.. உத்தேச இங்கிலாந்து அணி

Published : Mar 27, 2021, 03:18 PM IST
#INDvsENG ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டி.. உத்தேச இங்கிலாந்து அணி

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணியை பார்ப்போம்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில் 1-1 என தொடர் சமனடைந்துள்ளது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நாளை புனேவில் நடக்கிறது. முக்கியமான அந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச இங்கிலாந்து அணியை பார்ப்போம்.

இங்கிலாந்து அணியில் ஒரேயொரு மாற்றம் மட்டும் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஃபாஸ்ட் பவுலர் டாம் கரன் கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கினார். 10 ஓவரில் 83 ரன்களை வாரி வழங்கினார். அவரது பவுலிங்கை இந்திய வீரர்கள் அடி வெளுத்துவிட்டனர். குறிப்பாக கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் டாம் கரனின் பவுலிங்கை நொறுக்கிவிட்டனர்.

எனவே டாம் கரன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மார்க் உட் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், டேவிட் மாலன், ஜோஸ் பட்லர்(கேப்டன், விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரன், மொயின் அலி, மார்க் உட், ரீஸ் டாப்ளி, அடில் ரஷீத்.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!