#INDvsENG அப்பா புண்ணியவானே முதல்ல நீ கிளம்புப்பா.! கடைசி ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Mar 27, 2021, 2:55 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில் 1-1 என தொடர் சமனடைந்துள்ளது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நாளை புனேவில் நடக்கிறது. முக்கியமான அந்த போட்டியில் இந்திய அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கும். 

Latest Videos

பேட்டிங் ஆர்டரில் எந்த மாற்றமும் செய்யப்படாது. ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டும் அதே தான். ஸ்பின்னர் குல்தீப் யாதவ் மட்டும் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சாஹல் சேர்க்கப்படலாம். குல்தீப் கடந்த போட்டியில் படுமோசமாக சொதப்பினார். தன்னம்பிக்கையே இல்லாமல் பந்துவீசி ரன்களை வாரிவழங்கினார்.

குல்தீப்பின் பவுலிங்கில் ஸ்டோக்ஸும் பேர்ஸ்டோவும் அடி நொறுக்கிவிட்டனர். 10 ஓவர் வீசி 84 ரன்களை விட்டுக்கொடுத்தார் குல்தீப் யாதவ். ஃபீல்டிங்கிலும் சொதப்பினார். எனவே கடைசி போட்டியில் அவர் நீக்கப்பட்டு சாஹல் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாஹல் - குல்தீப் ஜோடி இந்திய அணியின் பிரதான ரிஸ்ட் ஸ்பின் ஜோடியாக திகழ்ந்த நிலையில், குல்தீப் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். மீண்டும் அவருக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அதையும் கெடுத்துக்கொண்டார் குல்தீப்.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், சாஹல், பிரசித் கிருஷ்ணா.
 

click me!