சச்சின் சாதனையை தகர்ப்பது அவ்வளவு ஈசியில்ல.. இதை செய்தால் மட்டுமே ஜோ ரூட்டால் முறியடிக்க முடியும் - கவாஸ்கர்

Published : Jun 14, 2022, 04:11 PM IST
சச்சின் சாதனையை தகர்ப்பது அவ்வளவு ஈசியில்ல.. இதை செய்தால் மட்டுமே ஜோ ரூட்டால் முறியடிக்க முடியும் - கவாஸ்கர்

சுருக்கம்

சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் ரெக்கார்டை தகர்ப்பது அவ்வளவு எளிதல்ல என்று கூறியுள்ள கவாஸ்கர், ஜோ ரூட் என்ன செய்தால் அந்த சாதனையை முறியடிக்க முடியும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.  

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி ரன்களை குவித்துவருகிறார். 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் சதமடித்து இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக்கொடுத்த ஜோ ரூட், 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலும் சதமடித்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 27வது சதம். கடந்த ஒன்றரை ஆண்டில் மட்டும் 10 சதங்கள் விளாசியுள்ளார் ஜோ ரூட். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த ஜோ ரூட், 119 டெஸ்ட்டில் விளையாடி 10191 ரன்களை குவித்துள்ளார். சதமடித்தாலே 150 ரன்களுக்கு மேல் கடந்து பெரிய இன்னிங்ஸ்களை ஆடிவருகிறார் ஜோ ரூட். அவரது கெரியரில் உச்சபட்ச ஃபார்மில் இருந்துவரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் தகர்த்துவிடுவார் என்று ஆஸி., முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் உட்பட பல முன்னாள் வீரர்கள் கருத்து கூறினர்.

சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 15921 ரன்களை குவித்து, டெஸ்ட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக திகழ்கிறார். 31 வயதான ஜோ ரூட், இன்னும் 6-7 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவார் என்பதால், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்துவிடுவார் என்பது பலரது கணிப்பு.

ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கரின் சாதனை அபாரமானது. ஜோ ரூட் சச்சினை முந்த கிட்டத்தட்ட 6000 ரன்கள் தேவை. அடுத்த 8 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 800-1000 ரன்கள் அடித்தால் மட்டுமே சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ரூட்டால் முறியடிக்க முடியும். முறியடிக்கவே முடியாது என கருதப்பட்ட பல சாதனைகள் முறியடிக்கப்பட்டிருக்கின்றன. எனவே கிரிக்கெட்டில் தகர்க்க முடியாத சாதனைகள் என்று எதுவுமில்லை. ஆனால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்க்க, ஜோ ரூட் ஓய்வுபெறும் வரை இதே ஃபார்மில் ஆட வேண்டும்.அது கடினம் என்று  கவாஸ்கர் கூறியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!