#INDvsENG அது எப்படீங்க அவரு இல்லாம ஆடலாம்..? இந்திய அணியை கடுமையாக விளாசிய கவாஸ்கர்

By karthikeyan VFirst Published Feb 13, 2021, 9:36 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்திய அணி பும்ராவுக்கு ஓய்வளித்த முடிவை விமர்சித்துள்ளார் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி சதம்(161) மற்றும் ரஹானேவின் அரைசதம்(67) ஆகியவற்றால் முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் அடித்துள்ளது. ரிஷப் பண்ட்டும் அக்ஸர் படேலும் களத்தில் இருந்தனர்.

இந்த போட்டியில் இந்திய அணி 3 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியது. ஸ்பின்னர்கள் சுந்தர் மற்றும் நதீமிற்கு பதிலாக அக்ஸர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர். அகமதாபாத்தில் நடக்கும் பகலிரவு டெஸ்ட்(பிங்க் பந்து) போட்டியில் பும்ரா ஆடுவது அவசியம் என்பதால், அவருக்கு 2வது டெஸ்ட்டில் ஓய்வளித்துவிட்டு சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் டெஸ்ட்டில் தோற்ற இந்திய அணி, 2வது டெஸ்ட்டில் வெற்றி கட்டாயத்துடன் களமிறங்கியுள்ள நிலையில், முக்கியமான போட்டியில் அணியின் நம்பர் 1 பவுலருக்கு ஓய்வளித்த அணி நிர்வாகத்தின் முடிவை கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், பும்ராவிற்கு ஓய்வளித்த முடிவை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. 2வது டெஸ்ட்டுக்கும் 3வது டெஸ்ட்டுக்கும் இடையே ஒரு வார காலம் இடைவெளி உள்ள நிலையில், பும்ராவிற்கு ஓய்வு தேவையில்லாத ஒன்று. அணியின் நம்பர் 1 ஃபாஸ்ட் பவுலரான பும்ராவிற்கு, வெற்றி பெற்றே தீர வேண்டிய முக்கியமான போட்டியில் ஓய்வளித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. அது சரியான முடிவல்ல என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!