விராட் கோலியை வைத்து தரமான சம்பவம் செய்த மொயின் அலி..! டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஸ்பின்னர்.. வீடியோ

Published : Feb 13, 2021, 07:08 PM IST
விராட் கோலியை வைத்து தரமான சம்பவம் செய்த மொயின் அலி..! டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஸ்பின்னர்.. வீடியோ

சுருக்கம்

2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை அவுட்டாகிய இங்கிலாந்து ஸ்பின்னர் மொயின் அலி ஒரு சாதனையை படைத்துள்ளார்.  

இந்தியா இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர் ஷுப்மன் கில் டக் அவுட்டாக, ரோஹித்துடன் இணைந்து நன்றாக ஆடிய புஜாரா, லீச்சின் சுழலில் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் கோலி மொயின் அலியின் சுழலில் டக் அவுட்டானார்.

86 ரன்களுக்கே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய ரோஹித்தும், 4வது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்த ரஹானேவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி 4வது விக்கெட்டுக்கு 162 ரன்களை குவித்தனர். சதமடித்த ரோஹித் சர்மா 161 ரன்களுக்கும் ரஹானே 67 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட்டும் அக்ஸர் படேலும் களத்தில் இருந்த நிலையில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் அடித்திருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது.

இந்த போட்டியில் கோலியை, தனது அபாரமான சுழலில் கோலியே அதிர்ச்சியடையுமளவிற்கு கிளீன் போல்டாக்கி டக் அவுட்டாக்கி அனுப்பினார் இங்கிலாந்து ஸ்பின்னர் மொயின் அலி. இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியை டக் அவுட்டாக்கிய முதல் ஸ்பின்னர் என்ற சாதனையை மொயின் அலி படைத்துள்ளார். 

விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 முறை டக் அவுட்டாகியுள்ளார். இன்று அவுட்டானதுதான் 11வது டக். இதற்கு முன் டக் அவுட்டான 10 முறையும் ஃபாஸ்ட் பவுலர்களின் பவுலிங்கிலேயே டக் அவுட்டாகியிருக்கிறார். இந்த போட்டியில் மொயின் அலியின் பந்தில் ஆட்டமிழந்ததுதான், முதல் முறையாக ஸ்பின்னரின் பந்தில் கோலி டக் அவுட்டானது. 
 

PREV
click me!

Recommended Stories

U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!
அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!