2 கிமீ ஓடமுடியாமல் பிசிசிஐயின் ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தோற்ற 6 வீரர்கள்

By karthikeyan VFirst Published Feb 13, 2021, 3:05 PM IST
Highlights

பிசிசிஐயின் புதிய ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் 6 வீரர்கள் தோல்வியடைந்துவிட்டனர்.
 

இந்திய அணி வீரர்களின் ஃபிட்னெஸ் தரம் உயர்ந்துள்ளது. வீரர்கள் ஃபிட்னெஸுடன் இருந்தால்தான் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதால் கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக விராட் கோலி கேப்டனான பின்னர், ஃபிட்னெஸ் தரம் உயர்ந்திருக்கிருக்கிறது.

வீரர்கள் ஃபிட்னெஸ் யோ யோ டெஸ்ட்டின் மூலம் பரிசோதிக்கப்பட்டுவருகிறது. யோ யோ டெஸ்ட்டில் தேறும் வீரர்கள் மட்டுமே இந்திய அணியில் இடம்பெறமுடியும். இந்நிலையில், இப்போது பிசிசிஐ, யோ யோ டெஸ்ட்டுடன் புதிய ஃபிட்னெஸ் டெஸ்ட் டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி 8 நிமிடம் 30 நொடிகளில் 2 கிமீ ஓட வேண்டும்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிவரும் இந்திய அணி, அடுத்ததாக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆடவுள்ளது. இந்த ஆண்டு டி20 உலக கோப்பையிலும் ஆடுகிறது. அந்தவகையில், இந்திய அணியில் இடம்பெறுவதற்காக அதற்கு தகுதியான 20 வீரர்களுக்கு யோ யோ டெஸ்ட் மற்றும் ரன்னிங் டெஸ்ட் செய்யப்பட்டது.

பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் 20 வீரர்கள் பரிசோதனை செய்யப்பட்டனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும் ஃபாஸ்ட் பவுலர்கள் 8 நிமிடம் 15 நொடிகளில் 2 கிமீ தொலைவு ஓடி முடிக்க வேண்டும். மற்ற வீரர்கள் 8 நிமிடம் 30 நொடிகளில் 2 கிமீ தொலைவு ஓட வேண்டும்.

2 கிமீ ரன்னிங் ஃபிட்னெஸ் டெஸ்ட்டில், விக்கெட் கீப்பர்கள் சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர் ராகுல் டெவாட்டியா, இடது கை பேட்ஸ்மேன் நிதிஷ் ராணா, ஃபாஸ்ட் பவுலர்கள் சித்தார்த் கவுல் மற்றும் ஜெய்தேவ் உனாத்கத் ஆகிய 6 வீரர்களும் ரன்னிங் ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தேறவில்லை.
 

click me!