நீ ஆடுன லெட்சணத்துக்கு உனக்கு மன்னிப்பே கிடையாது...! ரிஷப் பண்ட்டை கிழி கிழினு கிழித்த கவாஸ்கர்

Published : Jan 06, 2022, 06:24 PM IST
நீ ஆடுன லெட்சணத்துக்கு உனக்கு மன்னிப்பே கிடையாது...! ரிஷப் பண்ட்டை கிழி கிழினு கிழித்த கவாஸ்கர்

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட்டின் பொறுப்பற்ற பேட்டிங்கை கண்டு கடுப்படைந்த கவாஸ்கர், மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.  

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்துவருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்கள் மட்டுமே அடிக்க, தென்னாப்பிரிக்க அணி 229 ரன்கள் அடித்தது. 27 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 266 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் தென்னாப்பிரிக்க அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் அடித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு இன்னும் 122 ரன்கள் தேவை. இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடிவரும் நிலையில், 4ம் நாள் ஆட்டத்தின் முதல் செசன் முழுவதுமாக மழையால்  பாதிக்கப்பட்டது. 2வது செசனும் மைதானம் ஈரமாக இருப்பதால் தாமதமாகிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 17 ரன்கள் மட்டுமே அடித்த ரிஷப் பண்ட், 2வது இன்னிங்ஸில் மோசமான ஷாட்டை ஆடமுயன்று ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். கடந்த 2 ஆண்டுகளாக சரியாக ஆடாத புஜாராவும் ரஹானேவும் அணியில் தங்களது இடத்தை தக்கவைக்க சிறப்பாக ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் இருவருமே அரைசதம் அடித்தனர். சீனியர் வீரர்கள் என்பதால் அவர்களுக்கு இவ்வளவு அழுத்தம். இளம் வீரரான ரிஷப் பண்ட்டும் தொடர்ச்சியாக சொதப்பிவருகிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுத்திருக்கிறார் என்றாலும், அவரது மோசமான ஷாட் செலக்‌ஷன் தான் அவர் சீக்கிரம் அவுட்டாவதற்கு காரணம்.

ரிஷப் பண்ட் அவரது இயல்பான அதிரடி பேட்டிங்கை ஆடித்தான் இக்கட்டான நேரங்களில் இந்திய அணியை காப்பாற்றியிருக்கிறார். ஆனால் அதையே காரணம் காட்டி, சூழலை கருத்தில்கொள்ளாமல் அவர் ஆடும் மோசமான பேட்டிங்கிற்கு முட்டுக்கொடுக்க முடியாது. 

அந்தவகையில், ரிஷப்பின் அலட்சியமான பேட்டிங்கால் கடும் விமர்சனங்களை அவர் எதிர்கொண்டு வருகிறார். ரிஷப்பின் பேட்டிங் குறித்து பேசிய முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், க்ரீஸில் புதிதாக 2 பேட்ஸ்மேன்கள் இருக்கும்போது, ரிஷப் பண்ட் அப்படியொரு மோசமான ஷாட்டை ஆடுகிறார். அந்த ஷாட்டை ஆடியதற்கு அவருக்கு மன்னிப்பே கிடையாது. இதுதான் அவரது இயல்பான ஆட்டம் என்பதெல்லாம் முட்டாள்தனமானது. புஜாரா, ரஹானே ஆகிய சீனியர் வீரர்களெல்லாம் நெருக்கடியில் இருக்கும்போது, இவர் மட்டும் பொறுப்பற்ற முறையில் பேட்டிங் ஆடுகிறார் என்று கவாஸ்கர் விளாசியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?
IND vs SA 1st T20: ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!