#ICCWTC ஃபைனல் கொரோனா பயோ பபுளுக்கு பயந்து தெறித்து ஓடிய வர்ணனையாளர்கள்! கவாஸ்கருடன் இணையும் தினேஷ் கார்த்திக்

By karthikeyan VFirst Published May 24, 2021, 3:07 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் 2 இந்தியர்கள் வர்ணனை செய்யவுள்ளனர்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் ஜூன் 18-22ல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கிறது.  முதல் முறையாக நடத்தப்படும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஃபைனலில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.

கொரோனா  அச்சுறுத்தலால் வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் என அனைவருமே 10 நாட்கள் குவாரண்டின், பயோ பபுள் ஆகிய விதிகளை பின்பற்றி ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது.

அதனால், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வர்ணனை செய்ய இந்தியா மற்றும் நியூசிலாந்தை சேர்ந்த பல முன்னணி வர்ணனையாளர்களும் தயக்கம் காட்டியதையடுத்து, இந்தியா சார்பில் கவாஸ்கருடன் தினேஷ் கார்த்திக் வர்ணனை செய்யவுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.

இந்தியாவின் மற்ற முன்னணி வர்ணனையாளர்கள் இங்கிலாந்து செல்ல மறுத்ததையடுத்து, கவாஸ்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் இந்திய வர்ணனையாளர்களாக செல்கின்றனர். நியூசிலாந்து சார்பில் சைமன் டௌல் வர்ணனை செய்யவுள்ளார். ஃபைனலில் ஆடும் இந்தியா - நியூசிலாந்தை சேர்ந்த இந்த மூவரைத்தவிர, நடுநிலை வர்ணனையாளர்களாக மைக் அதெர்ட்டான் மற்றும் நாசர் ஹுசைன் ஆகிய இருவரும் வர்ணனை செய்யவுள்ளனர்.
 

click me!