#INDvsENG சென்னை வந்தடைந்த இங்கிலாந்து வீரர்கள்..! உற்சாக வரவேற்பளித்த சுந்தர் பிச்சை.. வீடியோ

Published : Jan 27, 2021, 09:42 PM IST
#INDvsENG சென்னை வந்தடைந்த இங்கிலாந்து வீரர்கள்..! உற்சாக வரவேற்பளித்த சுந்தர் பிச்சை.. வீடியோ

சுருக்கம்

டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக சென்னை வந்தடைந்த இங்கிலாந்து வீரர்களுக்கு டுவிட்டரில் வரவேற்பளித்தார் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை.  

4 டெஸ்ட், ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. 4 டெஸ்ட் போட்டிகளில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கத்திலும், கடைசி 2 டெஸ்ட் அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்திலும் நடக்கவுள்ளது.

இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து அப்படியே இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வந்துள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடப்பதால் இங்கிலாந்து வீரர்கள் இலங்கையிலிருந்து சென்னை வந்தடைந்துள்ளனர்.

இங்கிலாந்து வீரர்கள் சென்னை வந்தடைந்த வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் டுவிட்டரில் பகிர்ந்திருந்தது.

அந்த வீடியோவை கண்ட கூகுள் சி.இ.ஓவும் தமிழருமான சுந்தர் பிச்சை, என் சொந்த ஊரான சென்னைக்கு வந்துள்ள இங்கிலாந்து வீரர்களை வரவேற்கிறேன். இந்த தொடர் நல்ல தொடராக அமைய வாழ்த்துக்கள் என்று சுந்தர் பிச்சை வரவேற்றுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

Shubman Gill: பாகிஸ்தான் சாதனையை தகர்த்த 'பிரின்ஸ்' சுப்மன் கில்! ஆப்கானை பந்தாடி இந்தியா மாஸ் வெற்றி!
Rahmanullah Gurbaz: மின்னல் வேக சதம்.. டி வில்லியர்ஸ் சாதனையை தகர்த்த குர்பாஸ்.. மாஸ் பேட்டிங்!