#ENGvsIND இந்த பிட்ச்சுல ஏன்யா கோலி நீ பேட்டிங் தேர்வு செஞ்ச..? - ஸ்டூவர்ட் பிராட்

By karthikeyan VFirst Published Aug 25, 2021, 10:01 PM IST
Highlights

முதல் நாளில் முழுக்க முழுக்க பவுலிங்கிற்கு சாதகமான லீட்ஸ் பிட்ச்சில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துவிட்டதாக இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்தார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா(19) மற்றும் அஜிங்க்யா ரஹானே(18) ஆகிய இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்னே அடித்தனர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்திலோ அல்லது ரன்னே அடிக்காமலோ ஆட்டமிழந்தனர். கேஎல் ராகுல் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி விக்கெட் வீழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

அவரைத்தொடர்ந்து புஜாரா(1), கோலி(7), ரஹானே(18), ரிஷப் பண்ட்(2), ரோஹித்(19), ஜடேஜா(4), ஷமி(0), பும்ரா(0), சிராஜ்(3) ஆகிய அனைவரும் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்ததையடுத்து, இந்திய அணி வெறும் 78 ரன்களுக்கே முதல் இன்னிங்ஸில் சுருண்டது.

இந்நிலையில், லீட்ஸில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த விராட் கோலியின் முடிவு சரியானது அல்ல என்று இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டூவர்ட் பிராட், இங்கிலாந்து ஆடுகளங்களிலேயே முதல் நாள் பந்துவீச சாதகமானது லீட்ஸ் தான். ஆனால் அதில் போய், விராட் கோலி முதல் பேட்டிங் ஆட தீர்மானித்தது துணிச்சலான முடிவுதான். பிட்ச் போகப்போக நன்றாக மாறும். இந்த பிட்ச்சில் 3ம் நாளிலிருந்து ஃபாஸ்ட் பவுலிங் சுத்தமாக எடுபடாது. இத்துடன் முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார் ஸ்டூவர்ட் பிராட்.
 

click me!