ஸ்டீவ் ஸ்மித்தின் அல்டிமேட் சாதனை.. டான் பிராட்மேனையே தூக்கியடித்த தரமான சம்பவம்

By karthikeyan VFirst Published Sep 14, 2019, 5:14 PM IST
Highlights

கிரிக்கெட்டில் யாருடைய சாதனையையும் முறியடித்துவிடமுடியும். ஆனால் டான் பிராட்மேனின் ரெக்கார்டை யாராலும் முறியடிக்க முடியாது. அந்தளவிற்கு அந்தக்காலத்திலேயே அசாத்தியமான சாதனைகளை குவித்துவைத்துள்ளார் பிராட்மேன். ஆனால் ஸ்மித், அப்பேர்ப்பட்ட டான் பிராட்மேனையே ஒரு விஷயத்தில் பின்னுக்குத்தள்ளிவிட்டார் ஸ்மித்.
 

ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடிவரும் ஸ்மித், ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுப்பதோடு, அவரும் தனிப்பட்ட முறையில் பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவித்து மீண்டும் அணிக்கு திரும்பிய ஸ்மித்தின் பேட்டிங், தற்போது வேற லெவலில் உள்ளது. ஆஷஸ் தொடரில் மிகவும் அபாரமாக ஆடி ரன்களை குவித்துவருகிறார். 

முதல் டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம், இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள், நான்காவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம், இரண்டாவது இன்னிங்ஸில் 82 ரன்கள் மற்றும் நடந்துவரும் கடைசி டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 80 ரன்கள் என ரன்களை குவித்துவருகிறார் ஸ்மித். 

ஆஷஸ் தொடரின் முதல் 4 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வென்ற 2 போட்டிகளிலும் ஸ்மித் தான் ஆட்டநாயகன். ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக ஸ்மித் தான் திகழ்ந்தார். 

விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில், ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். நடந்துவரும் கடைசி ஆஷஸ் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அடித்த அரைசதம், இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக ஸ்மித் அடித்த 10வது அரைசதம். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு தொடர்ச்சியாக அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற இன்சமாம் உல் ஹக்கின்(9 அரைசதங்கள் vs இங்கிலாந்து) சாதனையை முறியடித்தார் ஸ்மித்.

கிரிக்கெட்டில் யாருடைய சாதனையையும் முறியடித்துவிடமுடியும். ஆனால் டான் பிராட்மேனின் ரெக்கார்டை யாராலும் முறியடிக்க முடியாது. அந்தளவிற்கு அந்தக்காலத்திலேயே அசாத்தியமான சாதனைகளை குவித்துவைத்துள்ளார் பிராட்மேன். ஆனால் ஸ்மித், அப்பேர்ப்பட்ட டான் பிராட்மேனையே ஒரு விஷயத்தில் பின்னுக்குத்தள்ளிவிட்டார் ஸ்மித்.

அதாவது, ஆஷஸ் தொடரில் தொடர்ச்சியாக 10 இன்னிங்ஸ்களில் டான் பிராட்மேன் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 1236 ரன்கள்(1937-1946). ஸ்மித் அவரது கடைசி 10 ஆஷஸ் இன்னிங்ஸ்களில் அடித்த ஸ்கோர் 1251 ரன்கள். இதன்மூலம் தொடர்ச்சியாக 10 ஆஷஸ் இன்னிங்ஸ்களில் அதிக ரன்களை குவித்த டான் பிராட்மேனை தூக்கியடித்துவிட்டார் ஸ்மித்.

தொடர்ச்சியாக 10 ஆஷஸ் இன்னிங்ஸ்களில் டான் பிராட்மேன் குவித்த அதிகபட்ச ஸ்கோர் - 1236 ரன்கள்

212, 169, 51, 144, 18, 102, 103, 16, 187, 234 - இதுதான் பிராட்மேனின் வெற்றிகரமான தொடர் 10 இன்னிங்ஸ்கள்(பிராட்மேன் அடித்த ரன்களின் அடிப்படையில்). 

ஸ்மித் அடித்த ஸ்கோர் - 1251 ரன்கள்

239, 76, 102, 83, 144, 142, 92, 211, 82, 80 - இது ஆஷஸ் தொடரில் தொடர்ச்சியாக 10 இன்னிங்ஸ்களில் ஸ்மித் அடித்த ஸ்கோர். 
 

click me!