இந்தியா அந்த வீரரை டீம்ல எடுக்காம தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுகிச்சு! இங்கி., முன்னாள் வீரர் செம குஷி

By karthikeyan VFirst Published Aug 5, 2021, 3:25 PM IST
Highlights

இந்திய அணி சீனியர் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஷ்வினை இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடவைக்காததன் மூலம் இந்திய அணி அவர்களை அவர்களே தோற்கடித்து கொண்டதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் புறக்கணிக்கப்பட்டார். ஆடும் லெவனில் அவரை எடுக்காமல்  ஸ்பின்னராக ஆல்ரவுண்டர் ஜடேஜாவை ஆடவைத்தது.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், சிராஜ், பும்ரா, ஷமி.

இந்திய அணியின் இந்த முடிவு இங்கிலாந்துக்குத்தான் சாதகமாக இருக்கும் என்று இங்கிலாந்து முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஸ்டீவ் ஹார்மிசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஸ்டீவ் ஹார்மிசன், எனக்கு வியப்பாக இருக்கிறது. மிகவும் வியப்பாக இருக்கிறது. அஷ்வின் ஆடாததில் இங்கிலாந்து அணி சற்று மகிழ்ச்சியாக இருக்கும். இங்கிலாந்து டிரெஸிங் ரூமில் புன்னகையை பார்க்க முடியும். பேட்டிங்கிலும் ஸ்கோர் செய்யக்கூடிய வீரர் அஷ்வின். இந்தியாவில் வேற லெவல் பவுலர் அஷ்வின். இங்கிலாந்து கண்டிஷனிலும் நன்றாகவே வீசி விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்கு எதிராக அண்மையில் 6-7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அஷ்வினை எடுக்காதது மற்றும் சரியான அணியை களமிறக்காததன் மூலம் இந்திய அணி அதன் தோல்வியை அதுவாகவே தீர்மானித்துக்கொண்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமாக பந்துவீசிய, அனுபவம் வாய்ந்த, ஆட்டத்தை பற்றி நன்கு அறிந்த மற்றும் ஸ்பின்னிற்கே ஒத்துழைப்பு இல்லாத கண்டிஷனில் கூட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சீனியர் ஸ்பின்னரான அஷ்வினை  அணியில் எடுக்கவில்லை. என்னை பொறுத்தமட்டில் இது இங்கிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என்றார் ஹார்மிசன்.

ஆனால், நாட்டிங்காமில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியை, அஷ்வின் இல்லாத இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 183 ரன்களுக்கு சுருட்டியது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் அடித்துள்ளது.
 

click me!