#WIvsAUS 2வது டி20யிலும் வங்கதேசத்திடம் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலியா

Published : Aug 05, 2021, 02:51 PM IST
#WIvsAUS 2வது டி20யிலும் வங்கதேசத்திடம் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலியா

சுருக்கம்

வங்கதேசத்திற்கு எதிரான 2வது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.  

ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்திடம் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, 2வது டி20 போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் ஆடியது.

ஆனால் 2வது போட்டியிலும் பேட்டிங் படுமோசமாக ஆடியதால் தோல்வியடைந்தது ஆஸ்திரேலியா. தாக்காவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் வழக்கம்போலவே மிட்செல் மார்ஷ் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடினார். மற்ற அனைவருமே சொதப்பினர். மிட்செல் மார்ஷ் மட்டும் நன்றாக ஆடி 45 ரன்கள் அடித்தார். மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் தன் பங்கிற்கு 30 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெறும் 121 ரன்கள் மட்டுமே அடித்தது.

122 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் சௌமியா சர்க்கார்(0), முகமது நயீம்(9) ஆகிய இருவரும் சொதப்பினர். அதன்பின்னர் ஷகிப் அல் ஹசன் 26 ரன்களும், மெஹிடி ஹசன் 23 ரன்களும் அடித்தனர். கேப்டன் மஹ்மதுல்லா டக் அவுட்டானார். அதன்பின்னர் அஃபிஃப் ஹுசைன்(37)மற்றும் நூருல் ஹசன்(22) ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி 19வது ஓவரில் இலக்கை எட்டினர்.

இதையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2-0 என டி20 தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளிலும் வங்கதேசத்திடம் படுதோல்வி அடைந்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!
பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?