இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், ஆத்திரமடைந்த இலங்கை ரசிகர்கள் மோதலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியானது நேற்று முன்தினம் நடந்தது. இதில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லலகே, சரித் அசலங்கா மற்றும் மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் இணைந்து 10 விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய சாதனை படைத்தனர். ஆம், ஆசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் 10 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர்களுக்கு அடுத்தடுத்து வெளியேற தனஞ்சயா டி சில்வா மற்றும் துனித் வெல்லலகே மட்டுமே கடைசி வரை போராடினர். எனினும், சில்வா 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக இலங்கை 41. 3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
Sri Lanka vs Pakistan: நடையை கட்டுமா பாகிஸ்தான்? ரன் ரேட் யாருக்கு சாதகம்?
இதன் மூலமாக தொடர்ந்து 13 ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்று வந்த நிலையில், 14ஆவது போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றதை தாங்க முடியாத இலங்கை ரசிகர்கள், இந்திய ரசிகர்களை கடுமையாக தாக்கினர். இதனால், ஆத்திரமடைந்த இந்திய ரசிகர்களும் பதிலடி கொடுத்தனர். இதையடுத்து அங்கு நின்றிருந்த போலீசார் இதனை கண்டு கொள்ளவில்லை. அதன் பிறகு அங்கு வந்து ரசிகர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். எனினும், இது குறித்து யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
PAK vs SL, Colombo Rain: கனமழையால் டாஸ் போடுவதில் சிக்கல்: பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா?