சகாலுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் சேர்ப்பு: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்!

Published : Jan 12, 2023, 01:18 PM IST
சகாலுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் சேர்ப்பு: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்!

சுருக்கம்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணி தற்போது 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாஅள் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 

சகாலுக்குப் பதிலாக குல்தீப் யாதவ்விற்கு வாய்ப்பளிக்கப்படுமா?

இலங்கை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதில், தில்ஷன் மதுஷங்கா மற்றும் பதும் நிஷாங்கா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார். நிஷாங்காவிற்குப் பதிலாக நுவானிந்து பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மதுஷங்காவிற்குப் பதிலாக லகிரு குமாரா சேர்க்காப்படுள்ளார். இதே போன்று இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி யுஸ்வேந்திர சகாலுக்குப் பதிலாக குல்தீப் யாதவ்விற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நமது வெப்சைட்டில் சகாலுக்குப் பதிலாக குல்தீப் யாதவ்விற்கு வாய்ப்பளிக்கப்படுமா என்று நியூஸ் வெளியிட்டிருந்தோம். அதே போன்று இன்றும் கூட அதனை குறிப்பிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யகுமார் யாதவ்விற்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? இந்தியா ஆடும் லெவன் இது!

முதலில் டாஸ் ஜெயிக்கும் அணி தான் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் என்று கூறியிருந்தோம். அதற்கு காரணம், மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பது தான். அதன்படி, டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இதே போன்று நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியிலும் இலங்கை அணி தான் டாஸ் ஜெயித்தது. ஆனால், அப்போது பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 373 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 306 ரன்கள் எடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

மறக்க முடியுமா ஹிட் மேனின் 264 ரன்கள்: 9 ஆண்டுகளுக்கு முன்பு ரோகித் சர்மா ஆடிய ருத்ர தாண்டவம்!


இந்தியா: 

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ்

இலங்கை:

நுவானிந்து பெர்னாண்டோ, அவிஷ்கா பெர்னாண்டோ, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சரித் அசலாங்கா, தனஞ்செயா டி சில்வா, தசுன் ஷனாகா (கேப்டன்), வணிந்து ஹசரங்கா, துணித் வெல்லாலாஜி, சமிகா கருணாரத்னே, கசுன் ரஜிதா, லகிரு குமாரா.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!