வாழ்வா சாவா போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கையின் அதிரடி முடிவு..! டாஸ் ரிப்போர்ட்

Published : Nov 01, 2021, 07:19 PM IST
வாழ்வா சாவா போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கையின் அதிரடி முடிவு..! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

டி20 உலக கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் 1-ல் இங்கிலாந்து அணியும், க்ரூப் 2-ல் பாகிஸ்தான் அணியும் கிட்டத்தட்ட ஒரு அடியை எடுத்து அரையிறுதியில் வைத்துவிட்டன.

க்ரூப் 1-ல் அரையிறுதிக்கு 2வது அணியாக முன்னேறும் வாய்ப்பை ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகளுமே பெற்றுள்ளன. இந்த அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவற்றில் எந்த அணி வேண்டுமானாலும் அரையிறுதிக்கு முன்னேற முடியும். அதற்கு மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடியாக வேண்டும்.

இதுவரை ஆடிய 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்று கிட்டத்தட்ட அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட இங்கிலாந்து அணியும், 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும் இன்னும் அரையிறுதி வாய்ப்பை பெற்றிருக்கும் இலங்கை அணியும் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

 ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டி இலங்கை அணிக்கு வாழ்வா சாவா போட்டி. எனவே வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது இலங்கை அணி. இங்கிலாந்து அணியும் வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். எனவே இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. இலங்கை அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே காம்பினேஷனுடன் தான் ஆடுகிறது.

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் பெரேரா (விக்கெட் கீப்பர்), சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, வனிந்து ஹசரங்கா, தசுன் ஷனாகா (கேப்டன்), சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, மஹீஷ் தீக்‌ஷனா, லஹிரு குமாரா.

இங்கிலாந்து அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை; எந்த மாற்றமும் செய்வதற்கான அவசியமும் இல்லை.

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, ஒயின் மோர்கன் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், டைமல் மில்ஸ்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Most Educated Cricketer: தோனி, கோலி, ரோகித் இல்ல.. அதிகம் ப‌டித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?
Ajinkya Rahane: ஓய்வுபெற்ற ரஹானே..! BCCIயிடம் பெறப்போகும் ஓய்வூதியம் எவ்வளவு தெரியுமா..?