Asia Cup: வாழ்வா சாவா போட்டியில் இலங்கை - வங்கதேசம் பலப்பரீட்சை..! வெற்றி யாருக்கு..? டாஸ் ரிப்போர்ட்

Published : Sep 01, 2022, 07:11 PM IST
Asia Cup: வாழ்வா சாவா போட்டியில் இலங்கை - வங்கதேசம் பலப்பரீட்சை..! வெற்றி யாருக்கு..? டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பி பிரிவில் சூப்பர்  4 சுற்றுக்கு தகுதிபெறப்போகும் 2வது அணி எதுவென்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.   

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, இலங்கை மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தி முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. 

ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

இதையும் படிங்க - 3ம் வரிசையை விராட் கோலியிடமிருந்து தட்டிப்பறிக்கும் தரமான வீரர்..!

ஆசிய கோப்பை லீக் சுற்றில் ஏ பிரிவில் பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகளுக்கு இடையேயான போட்டி எஞ்சியிருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும்.

ஆனால் பி பிரிவில் இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி கடுமையாக இருக்கும். இரு அணிகளுமே வெற்றி வேட்கையுடன் களமிறங்கியுள்ள வாழ்வா சாவா போட்டி துபாயில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. டாஸ் இலங்கைக்கு சாதகமாக அமைந்துள்ளது.

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சாரித் அசலங்கா, தனுஷ்கா குணதிலகா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்‌ஷனா, தில்ஷன் மதுஷங்கா, அசிதா ஃபெர்னாண்டோ.

இதையும் படிங்க - Asia Cup: இர்ஃபான் பதான் சாதனையை தகர்த்து முதலிடம் பிடித்தார் ரவீந்திர ஜடேஜா..!

வங்கதேச அணி:

சபீர் ரஹ்மான், முஷ்ஃபிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், மஹ்மதுல்லா, மொசாடெக் ஹுசைன், மஹெடி ஹசன், டஸ்கின் அகமது, மெஹிடி ஹசன் மிராஸ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், எபாடட் ஹுசைன்.
 

PREV
click me!

Recommended Stories

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு உடல்நலக்குறைவு, SMAT போட்டிக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதி
சூர்யகுமார், கில்லுக்கு வாழ்வா சாவா போட்டி; தொடரைக் கைப்பற்றுமா இந்தியா..?