3ம் வரிசையை விராட் கோலியிடமிருந்து தட்டிப்பறிக்கும் தரமான வீரர்..!

By karthikeyan V  |  First Published Sep 1, 2022, 6:47 PM IST

விராட் கோலிக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை 3ம் வரிசையில் இறக்கவேண்டும் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார். 
 


இந்திய அணி டி20 உலக கோப்பைக்காக தயாராகிவருகிறது. டி20 உலக கோப்பைக்கான சிறப்பான முன் தயாரிப்பாக அமைந்துள்ளது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர். ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்றில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இந்திய அணி.

ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடிய சூர்யகுமார் யாதவ் 26 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 68 ரன்களை குவித்தார். இந்திய அணியில் இடம்பிடித்ததிலிருந்தே கடந்த ஓராண்டாக செம ஃபார்மில் மிக அபாரமாக பேட்டிங் ஆடிவருகிறார் சூர்யகுமார் யாதவ்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க - சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டுப்ளெசிஸ் நியமனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ஹெட்கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங்

அதிலும் ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் அவரது பேட்டிங் அபாரம். சூர்யகுமார் யாதவின் ருத்ரதாண்டவத்தை மறுமுனையில் நின்று பார்த்த விராட் கோலி, இன்னிங்ஸுக்கு பின் சூர்யகுமார் யாதவிடம் தலைவணங்கி அவரது பேட்டிங்கிற்கு அங்கீகாரம் செய்தார்.  விராட் கோலி இப்போது பெரிய ஃபார்மில் இல்லையென்றாலும், அவரும் அரைசதம் அடித்து 44 பந்தில் 59 ரன்கள் அடித்தார். விராட் கோலி மாதிரியான வீரரே தலைவணங்குகிறார் என்றால், அது சாதாரண விஷயமல்ல. அந்தளவிற்கு சூர்யகுமார் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்திருந்தார். 

இந்நிலையில், விராட் கோலிக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை 3ம் வரிசையில் பேட்டிங் ஆடவைக்கவேண்டும் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார். கேகேஆர் அணிக்கு 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார் கம்பீர். அப்போது கம்பீரின் கேப்டன்சியில் சூர்யகுமார்யாதவ் கேகேஆர் அணியில் ஆடியிருக்கிறார்.

இதையும் படிங்க - Asia Cup: இர்ஃபான் பதான் சாதனையை தகர்த்து முதலிடம் பிடித்தார் ரவீந்திர ஜடேஜா..!

இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் குறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர்,  இன்னொரு வீரர் ஃபார்முக்கு வரவேண்டும் என்பதற்காக ஃபார்மில் உள்ள வீரரை வீணடிக்கக்கூடாது. இங்கிலாந்தில் அபாரமாக ஆடிய சூர்யகுமார் யாதவ், வெஸ்ட் இண்டீஸிலும் அசத்தினார். சூர்யகுமார் யாதவுக்கு 30 வயது ஆகிறது. அவர் ஒன்றும் 21-22 வயது வீரர் அல்ல. சூர்யகுமார் யாதவ் இருக்கும் ஃபார்முக்கு அவரை 3ம் வரிசையில் இறக்கவேண்டும். அதன்பின்னர் இறங்குவதால் அவருக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. எனவே டி20 உலக கோப்பையில் சூர்யகுமார் யாதவ் தான் 3ம் வரிசையில் இறங்கவேண்டும் என்று கம்பீர் கருத்து கூறியுள்ளார். 
 

click me!