India vs Sri Lanka: 3வது டி20 போட்டி டாஸ் ரிப்போர்ட்..! இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்

By karthikeyan VFirst Published Feb 27, 2022, 6:59 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்றுவிட்டதால் கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இஷான் கிஷன், பும்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் சாஹல் ஆகிய நால்வரும் நீக்கப்பட்டு ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், ஆவேஷ் கான் மற்றும் முகமது சிராஜ் ஆகிய நால்வரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இஷான் கிஷன் ஆடாததால் ரோஹித்துடன் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்குகிறார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஆவேஷ் கான்.

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, தனுஷ்கா குணதிலகா, சாரித் அசலங்கா, தினேஷ் சண்டிமால் (விக்கெட் கீப்பர்), ஜனித் லியானகே, தசுன் ஷனாகா (கேப்டன்), சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, ஜெஃப்ரீ வாண்டர்சே, பினுரா ஃபெர்னாண்டோ, லஹிரு குமாரா.
 

click me!