#SLvsIND முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்..! இந்திய அணியில் 2 வீரர்கள் அறிமுகம்

Published : Jul 18, 2021, 03:05 PM IST
#SLvsIND முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்..! இந்திய அணியில் 2 வீரர்கள் அறிமுகம்

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது. கொழும்பில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகிய 2 வீரர்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகின்றனர். குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகிய இருவரும் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இணைந்து ஆடுகின்றனர்.

இந்திய அணி:

ஷிகர் தவான்(கேப்டன்), பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை அணி:

அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பானுகா(விக்கெட் கீப்பர்), பானுகா ராஜபக்சா, தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனாகா(கேப்டன்), வஹிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, இசுரு உடானா, துஷ்மந்தா சமீரா, லக்‌ஷன் சந்தாகன்.
 

PREV
click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!