டி20 உலக கோப்பையவே பாகிஸ்தான் ஜெயிச்சாலும் வேஸ்ட்டுதான்..! அக்தர் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 17, 2021, 10:13 PM IST
Highlights

பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பையையே ஜெயித்தாலும் கூட, பாகிஸ்தான் அணி சரியான திசையில் தான் சென்று கொண்டிருக்கிறது என்று அர்த்தமல்ல என்று ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆன பாகிஸ்தான் அணி, டி20 தொடரின் முதல் போட்டியில் 232 ரன்களை குவித்து இங்கிலாந்தை 201 ரன்களுக்கு சுருட்டி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி டி20 போட்டியில் நன்றாக ஆடி வெற்றி பெற்றாலும், அந்த அணி நிர்வாகத்தின் செயல்பாடு, வீரர்களின் ஆட்டம், ஃபிட்னெஸ் என எந்தவிதத்திலும் பாகிஸ்தான் அணி மீது நல்ல அபிப்ராயம் இல்லாத அக்தர், பாகிஸ்தான் அணி குறித்த நிதர்சனத்தை கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் நன்றாகத்தான் ஆடுகிறது. ஆனால் அதுதான் அந்த அணியின் பிரச்னையும் கூட. ஏனெனில், டி20 போட்டியை போலவே ஒருநாள் போட்டிகளிலும் ஆடி 50 ஓவர்கள் முழுமையாக ஆடாமல் ஆல் அவுட்டாகிறது. அதுதான் அந்த அணியின் பிரச்னையாக உள்ளது. அதை சுட்டிக்காட்டித்தான் அக்தர் விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி குறித்து பேசியுள்ள அக்தர், பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பையை வென்றால் கூட அது பெரிய ஆச்சரியமில்லை. ஆனால், டி20 உலக கோப்பையை வென்றுவிட்டால், உடனே பாகிஸ்தான் அணி சரியான திசையில் தான் சென்றுகொண்டிருக்கிறது அர்த்தமா? கண்டிப்பாக இல்லை. டி20 கிரிக்கெட் நமது இலக்கு அல்ல. அது நமது இலக்காகவும் இருக்கக்கூடாது என்று அக்தர் தெரிவித்துள்ளார்.
 

click me!