மிக விரைவில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவார்..! அடித்துக்கூறும் முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Jul 17, 2021, 10:20 PM IST
Highlights

ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக கூடிய விரைவில் நியமிக்கப்படவில்லை என்றால் தான், அது ஆச்சரியம் என்று முன்னாள் வீரர் WV ராமன் தெரிவித்துள்ளார்.
 

விராட் கோலி தலைமையிலான மெயின் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அதனால் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி சென்றுள்ளது.

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு இலங்கைக்கு சென்றுள்ளார். ஒரு கிரிக்கெட் வீரராக இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பு செய்து பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த ராகுல் டிராவிட், இந்திய அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக இருந்து பல இளம் வீரர்களை உருவாக்கி கொடுத்த ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக தற்போது இருந்துவருகிறார்.

இந்நிலையில் தான், இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக சென்றுள்ளார். இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் என்பதற்கான சமிக்ஞையாகத்தான் ராகுல் டிராவிட் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது அமைந்திருக்கிறது. இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் என்ற பேச்சு எழுந்துள்ளது. 

ஆனால் ராகுல் டிராவிட் இந்திய சீனியர் அணியை விட அண்டர் 19 அணிக்குத்தான் தேவை. இதுவரை பல திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை வளர்த்தெடுத்து இந்திய அணிக்கு கொடுத்த ராகுல் டிராவிட், அந்த பணியை மேலும் தொடர வேண்டும். அதனால் இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படக்கூடாது என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்திருந்தார்.

ஆனால் WV ராமன், ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ராமன், ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக மிக விரைவில் நியமிக்கப்படுவார். அப்படி நடக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம் என்று ராமன் தெரிவித்துள்ளார்.
 

click me!