இலங்கையில் சில ஐபிஎல் போட்டிகளை நடத்துமாறு இலங்கை விளையாட்டு துறை அமைச்சர், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
பிசிசியின் மூலமாக ஆண்டுதோறும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. முதல் முறையாக கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் நடத்தப்பட்டது. அந்த வகையில் தற்போது 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் திருவிழா வரும் மார்ச் 22 ஆம் தேதி நடக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
Virat Kohli: அடிக்கடி வீட்டுக்கு போகும் விராட் கோலி – முதல் டி20 போட்டியில் விளையாடமாட்டார்!
ஆனால், அதே தேதியில் பொதுத் தேர்தலும் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தான் பிசிசிஐ வட்டாரத்திலிருந்து நம்பத் தகுந்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் நடத்தப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
England Lions vs India A: இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம்!
தேர்தலின் போது எந்த மாநிலமும் போட்டியை நடத்த விரும்பாத நிலையில் நியாயமான காரணத்துடன் போடியானது வேறொரு இடத்திற்கு மாற்றப்படுமே தவிர வெளிநாட்டில் நடத்த எந்த திட்டமும் இல்லை என்று தெளிவுபடுத்தியிருக்கிறது. கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2024 ஏலத்தின் முடிவிற்குப் பிறகு அணிகள் ஏற்கனவே தங்கள் அணிகளை பலப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் ஃபெர்னாண்டோ ஐபிஎல் தொடரின் சில போட்டிகளை இலங்கையில் நடத்துமாறு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.