#SLvsSA தட்டுத்தடுமாறி 120 ரன்கள் அடித்தது இலங்கை..! இலங்கையை ஒயிட்வாஷ் செய்ய தென்னாப்பிரிக்காவுக்கு வாய்ப்பு

Published : Sep 14, 2021, 08:56 PM IST
#SLvsSA தட்டுத்தடுமாறி 120 ரன்கள் அடித்தது இலங்கை..! இலங்கையை ஒயிட்வாஷ் செய்ய தென்னாப்பிரிக்காவுக்கு வாய்ப்பு

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 120 ரன்கள் அடித்து, 121 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது.  

தென்னாப்பிரிக்க அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இலங்கை வென்றது. 

3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி 2-1 என டி20 தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் களமிறங்கிய இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது.

இலங்கை அணியின் தொடக்க வீரர் குசால் பெரேரா பொறுப்புடன் ஆடி 39 ரன்கள் அடித்தார். அவர் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ(12), தனஞ்செயா டி சில்வா(1), பானுகா ராஜபக்சா(5), காமிண்டு மெண்டிஸ்(10) ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கேப்டன் ஷனாகா 18 ரன்னில் ஆட்டமிழந்தார். 10ம் வரிசையில் இறங்கிய சாமிகா கருணரத்னே, 2 சிக்ஸர்களை விளாசி 24 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 120 ரன்கள் அடித்த இலங்கை அணி, 121 ரன்கள் என்ற எளிய இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது.

ஏற்கனவே 2-1 என டி20 தொடரை வென்றுவிட்ட தென்னாப்பிரிக்க அணிக்கு, கடைசி டி20யிலும் வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்ய அருமையான வாய்ப்புள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ T20: பேட்டிங் ஸ்டைலை மாற்றுகிறாரா சூர்யகுமார்?.. அவரே சொன்ன அதிரடி பதில்!
IND VS NZ முதல் டி20.. ஷ்ரேயாஸ் ஐயர் இடத்துக்கு 'ஆப்பு' வைத்த இளம் வீரர்.. பிளேயிங் லெவன்!