#INDLvsSLL இறுதிப்போட்டி: கோப்பை யாருக்கு? இந்தியா லெஜண்ட்ஸ் முதலில் பேட்டிங்

Published : Mar 21, 2021, 06:51 PM IST
#INDLvsSLL இறுதிப்போட்டி: கோப்பை யாருக்கு? இந்தியா லெஜண்ட்ஸ் முதலில் பேட்டிங்

சுருக்கம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை லெஜண்ட்ஸ் அணி, இந்தியா லெஜண்ட்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.  

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக தொடர் இந்தியாவில் ராய்ப்பூரில் நடந்துவருகிறது. இந்தியா லெஜண்ட்ஸ் மற்றும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இலங்கை லெஜண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. எனவே இந்தியா லெஜண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடவுள்ளது.

இந்தியா லெஜண்ட்ஸ் அணி:

சேவாக், சச்சின் டெண்டுல்கர்(கேப்டன்), யுவராஜ் சிங், யூசுஃப் பதான், சுப்ரமணியம் பத்ரிநாத், நமன் ஓஜா(விக்கெட் கீப்பர்), இர்ஃபான் பதான், மன்ப்ரீத் கோனி, வினய் குமார், பிரக்யான் ஓஜா, முனாஃப் படேல்.

இலங்கை லெஜண்ட்ஸ் அணி:

தில்ஷான்(கேப்டன்), சனத் ஜெயசூரியா, உபுல் தரங்கா(விக்கெட் கீப்பர்), ஜெயசிங்கே, சமரசில்வா, கௌஷல்யா வீரரத்னே, ரசல் அர்னால்டு, ஃபர்வீஸ் மஹரூஃப், குலசேகரா, தமிகா பிரசாத், ரங்கனா ஹெராத்.
 

PREV
click me!

Recommended Stories

350 ஹை-டெக் AI கேமரா.. பெங்களூரு மைதானத்தில் ரோபோ கண்காணிப்பு.. ஆர்சிபி ரசிகர்கள் குஷி!
கிரிக்கெட்டில் 'பேஸ்பால்' விதி: பேட்ஸ்மேன்களுக்கு இனி ஜாக்பாட்!