ICC WTC ஃபைனலுக்கு முன்னேறியே தீரணும்.. நியூசி.,க்கு எதிரான டெஸ்ட்டில் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை

Published : Mar 10, 2023, 06:54 PM IST
ICC WTC ஃபைனலுக்கு முன்னேறியே தீரணும்.. நியூசி.,க்கு எதிரான டெஸ்ட்டில் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை

சுருக்கம்

நியூசிலாந்தை 2-0 என டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற இலங்கைக்கு வாய்ப்பிருக்கிறது எனும் சூழலில், முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக ஆடிவருகிறது இலங்கை அணி.  

இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இலங்கைஅணி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி தோற்றால் இலங்கை அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற முடியும்.

அதனால் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் களமிறங்கிய இலங்கை அணி முதல் டெஸ்ட்டில் அபாரமாக ஆடிவருகிறது. நியூசிலாந்து - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவின் சாதனையை தகர்த்து முரளிதரனை விரட்டும் அஷ்வின்

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியில் கேப்டனும் தொடக்க வீரருமான திமுத் கருணரத்னே அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் குசால் மெண்டிஸ் அடித்து ஆடி 83 பந்தில் 87 ரன்கள் அடித்தார். ஆஞ்சலோ மேத்யூஸ்(47), தினேஷ் சண்டிமால்(39) மற்றும் தனஞ்செயா டி சில்வா(46) ஆகியோரும் பங்களிப்பு செய்ய, முதல் இன்னிங்ஸில் 355 ரன்கள் அடித்தது இலங்கை அணி.

IND vs AUS: அஷ்வின் 6 விக்கெட்.. கவாஜா, க்ரீன் சதங்களால் முதல் இன்னிங்ஸில் மெகா ஸ்கோர் அடித்த ஆஸ்திரேலியா

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே மற்றும் டாம் லேதம் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 67 ரன்களை சேர்த்தனர். கான்வே 30 ரன்கள் மட்டுமே அடித்தார். ஆனால் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த டாம் லேதம் 67 ரன்கள் அடித்தார். கேன் வில்லியம்சன்(1), ஹென்ரி நிகோல்ஸ்(2), டாம் பிளண்டெல் (7) ஆகிய மூவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, 151 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது நியூசிலாந்து அணி. 2ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்துள்ளது. டேரைல் மிட்செல் 40 ரன்களுடனும், அவருடன் மைக்கே பிரேஸ்வெல்லும் களத்தில் உள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ 2வது ஓடிஐயில் ரோகித், விராட் கோலி சொதப்புவார்கள்.. ஆருடம் சொன்ன அதிரடி வீரர்!
Virat Kohli: ஜஸ்ட் 1 ரன்னில் சச்சினின் சாதனையுடன் போட்டிப்போடும் கோலி